இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91) கெய்ரோவில் காலமானார். 30 ஆண்டுகள் அதிபராக இருந்த முபாரக் 2013-ல் புரட்சிக்கு பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

2. டில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போதுஇந்தோனேசியாவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இன்றும் இந்த வன்முறை தொடர்ந்ததால், பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து, இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

3.  தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலுக்காக அதனை எழுதிய எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

4. இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

5. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6. மத்திய பாஜக அரசின் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணியினர் புதுச்சேரி காமராஜர் சிலை முன், சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வு செய்த பாஜக அரசாங்கத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

7. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8. கொளத்தூர் தொகுதியில் நலதிட்ட உதவிகள் வழங்க சென்று கொண்டிருந்த ஸ்டாலின் சாலையில் விபத்தில் சிக்கியிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

9. காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் விவசாய சங்கத்தினர் பாராட்டு விழா நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதை முதலமைச்சர் பழனிசாமியும் உறுதி செய்துள்ளார்.

10.  தங்கம் இன்று கிராமுக்கு ரூ. 69 குறைந்து ரூ. 4,097 ஆகவும், பவுனுக்கு ரூ. 552 குறைந்து ரூ. 32,776 ஆகவும் விற்பனை ஆகிறது.

HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்