இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. தனது டுவிட்டர் பக்கத்தை பெண் ஒருவர் நிர்வகிக்க வாய்ப்பு வழங்க போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து விலக இருப்பதாக நினைத்திருந்த பிரதமர் இன்று இந்த திருப்புமுனையான முடிவை எடுத்துள்ளார்.
2. டில்லி வன்முறையின் போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்ற நபரை உத்தரபிரதேசத்தில் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
3. கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்று நோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் வெவ்வேறு காலங்களில் குளிர்காலம் இருப்பதால், இது ஆண்டு முழுவதும் பரவக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
4. இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி தமது ட்விடடர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார். இந்த பதிவுடன் வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த தற்காப்பு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தில், மதத்தின் அடிப்படையில், மக்கள் விடுபட்டதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
6. பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 30 நிமிடங்கள் வரை டில்லி கலவரம் தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
7. புதுச்சேரி கல்வி அமைச்சர் நடந்து சென்றபொழுது அவரது மொபைல் போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ஒடியன்சாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
8. கொரோனா வைரசுக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தெரிவித்தார்.
9. கிழக்கு கடலில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 2019 நவம்பர் 28க்குப் பிறகு வட கொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.
10. இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு குழுவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். நவ்தீப் சைனி உள்ளிட்ட இரண்டு மூன்று வீரர்களின் திறன் கவனிக்கப்பட்டு அணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் ஆக யாருக்கு வாய்ப்பு...' 'பிரதமர் மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ட்வீட்...' இது மகளிர் தின ஸ்பெஷல்...!
- 'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டேக்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "யோகா செய்தால் கொரோனா தாக்காது!" -'யோகி ஆதித்யநாத்'... "இது தெரியாம ஒரு மூவாயிரம் பேர் செத்துட்டாங்களே..." "சீன அதிபர் கண்ணில் படும் வரை இந்த செய்தியை பரப்பவும்..."
- "கடைசில எங்களையும் டிக்-டாக் பண்ண வச்சிட்டிங்களே...!" "வதந்திகளைத் தடுக்க எங்களுக்கு வேற வழி தெரியல..." 'கொரோனாவுக்கு' எதிராக களத்தில் இறங்கிய 'WHO'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "கொரோனா மட்டும் நாட்டுக்குள்ள வந்துச்சு..." "தொலைச்சு கட்டிருவேன்..." "தலைவனுக்கு பயப்படுவதா?... கொரோனாவுக்கு பயப்படுவதா?" விழி பிதுங்கும் 'வடகொரிய' அதிகாரிகள்...
- ‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’!
- "கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும்..." "விசில் அடிக்கணும்..." "யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும்..." "அவர்தான் அதிமுக காரர்..." அமைச்சரின் 'அதிரடி' பேச்சு...