‘இதுதான் என் மண்ணு.. இங்கதான் இருப்பேன்’.. தனி ஆளாய் தாலிபான்களுக்கு ‘தண்ணி’ காட்டும் நபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பஞ்ச்ஷிர் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்துள்ள நிலையில், ஆப்கான் முன்னாள் துணை அதிபர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியதும், ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆப்கானின் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தாலிபான்களால் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியை மட்டும் கைப்பற்ற முடியவில்லை.

அங்கு ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அம்ருலே தலைமையிலான வடக்கு கூட்டணி அமைப்பு, தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. இதனால் சில நாட்களாக இரு அமைப்புகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இதில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணமும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தாலிபான் வட்டாரங்கள் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை வடக்கு கூட்டணி அமைப்பு மறுத்துள்ளது. தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகவும், தாலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ட்வீட் செய்த ஆப்கான் முன்னாள் அதிபர் அம்ருல்லா சாலே, ‘இது என் மண். எனது மண்ணின் கண்ணியத்தைக் காக்க நான் இருக்கிறேன். எதிர்ப்பு தொடரும்’ என அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் அம்ருல்லா சாலேவின் மகன் எபதுல்லா சாலேவும் பஞ்ச்ஷிரை தாலிபான்கள் கைப்பற்றியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்