'அட...!' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' "ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'
முகப்பு > செய்திகள் > உலகம்வியட்நாமில் ஏடிஎம் மெஷின் முறையைப் பயன்படுத்தி அரிசி விநியோகிக்கும் நூதன முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அரிசி கிடைக்க அரசாங்கம் வழி செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வியட்நாமில் வைரஸ் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 265 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
அந்நாடு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது. மக்கள் அரசின் தீவிர கட்டப்பாட்டுக்குள் இருந்தாலும், அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் அந்நாட்டு அரசு மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
அந்த வகையில் அடிப்படைத் தேவையான அரிசி விநியோகத்தை அந்நாட்டு அரசு எளிமைப்படுத்தியுள்ளது. ஏடிஎம் மெஷின் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கும் சூப்பர் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 ஐந்து மணிவரை இந்த ஏடிஎம் இயந்திரத்தில் அரசி கிடைக்கும். இதனை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த துணிப்பைகளில் நிரப்பிக்கொள்ளலாம். வரிசையில் நிற்பவர்கள் 6 அடி இடைவெளி விட்டு நின்றுகொண்டு அரிசி பெற்றுச் செல்லலாம். இவர்கள் ஹேண்ட் சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தபின்னரே அரிசியை ஏடிஎம்மில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஹூ நகரத்தில் ஒரு நாளைக்கு 2 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஹோ சீ மின் நகரத்தில் அதிக ஏழை மக்கள் வசிக்கின்றனர். இதனால் அங்கு 24 மணிநேரமும் ஏடிஎம்-ல் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
பொதுமக்களை வெயிலில் காக்க வைக்காமலும், ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொள்வதை தவிர்க்கும் வகையிலும், பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது வியட்நாம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
- ஊரடங்கு அமலில் இருப்பதால்... மதுப்பிரியர்களை குஷி படுத்த வாலிபர் செய்த காரியம்!... லைக்குகளுக்கு ஆசைப்பட்டதால் வந்த விபரீதம்!
- வேகமாக வந்த ‘சைரன் வச்ச கார்’.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் அதிரவைத்த இளைஞர் பதில்..!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- VIDEO: சாலையில் சிந்திய பாலுக்காக... தெரு நாய்களோடு முண்டியடித்துக் கொண்ட ஏழை!.. இதயத்தை நொறுக்கும் சம்பவம்!
- இத்தாலியில் பரபரப்பு!.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... 'மாஃபியா கும்பல் செய்த விநோதமான காரியம்!'... கையறுநிலையில் அரசு!
- ‘கொரோனா பயத்தால்’... ‘தயங்கி நின்ற சுகாதார ஊழியர்கள்’... ‘துணிச்சலாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா’!
- 'முதல் முறையாக ஒத்துக்கொண்ட’... ‘உலக சுகாதார அமைப்பு’... ‘அந்த வைரஸைவிட 10 மடங்கு ஆபத்தான கோவிட்-19’... ‘லாக் டவுன் விஷயத்தில் எச்சரிக்கை’!
- 'மாப்பிள இந்த வீடியோவ போடு, நீ வேற லெவல்ல போய்டுவ'...'உசுப்பேத்திய நண்பன்'... காத்திருந்த ட்விஸ்ட்!