கீழ எல்லாரும் நடுங்கிட்டு இருந்தப்போ.. மேடையில மட்டும் சீக்ரெட்டா ரெட் கார்பெட்டுக்கு அடியில.. சர்ச்சையான வடகொரிய அதிபர் தந்தையின் பிறந்த நாள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா: வடகொரிய அதிபரின் தந்தையின் பிறந்த நாள் தினத்தை கொண்டாட மக்களை உறைய வைக்கும் பனியில் நிறுத்திய நிகழ்வின் போட்டோ இணையத்தில் வைலராகி வருகிறது.

Advertising
>
Advertising

அவரு கூட எப்படிங்க கம்பேர் பண்ணுவீங்க? எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்.. வெடித்த சர்ச்சையால் உடனே டெலீட்

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை மற்றும் முன்னாள் வடகொரிய அதிபரான கிம் ஜாங் 2-வின் பிறந்தநாள் கொண்டாட்டம் வருடம்தோறும் பிப்ரவரி 16 அன்று விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் கிம் ஜாங்-2 வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அதாவது பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று சமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் அச்சத்திற்கு பின் கிட்டத்தட்ட கடந்த ஜூலை 2019-க்குப் பிறகு வடகொரியாவில் நடந்த முதல் தேசிய கூட்டம் இது என கூறப்படுகிறது.

பொதுமக்கள் மரியாதை செலுத்த வர வேண்டும்:

அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சம்ஜியோன் நகரத்தை சீரமைத்ததும் குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் 2, வடகொரிய நாட்டின் முன்னாள் தலைவர் என்பதால் இந்த நாளில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வர வேண்டும் என்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

வானவேடிக்கை:

அந்த தினத்தின் தொடக்கத்தில் வானவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்த விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உறைய வைக்கும் குளிரில் நிற்க வைத்து தந்தையின் புகழ் பற்றி பேசி கொண்டிருந்தார்.

குளிரில் நின்றுக்கொண்டிருந்த மக்கள்:

மேலும், அதிபர் அவருக்கும் அவருடன் மேடையில் இருந்த அவரது நண்பர்களுக்கு மட்டும் ரகசிய ஹீட்டர்கள் அமைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் குளிர் -15 டிகிரி செல்சியஸ் எனவும் கூறப்படுகிறது. அதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எந்த வித கையுறையும் வெப்பமூட்டும் கருவிகளும் இல்லாமல் குளிரில் நின்று கொண்டிருந்ததை வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேடையில் இருந்தவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஹீட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த ஹீட்டர்களுக்கு மேடையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்திற்கு கீழாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாகவும் வெளியான செய்தி உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலியாக நீந்திக் கொண்டிருந்த நபர்.. கண் இமைக்கும் நேரத்துக்குள்ள.. கடற்கரையில நின்னவங்க அப்படியே உறைஞ்சு போய்ட்டாங்க

ICE FREEZES

மற்ற செய்திகள்