'எச்சரித்தும் கேட்காமல்'... 'மாற்றி, மாற்றி கூறி'... 'தற்போது புதிய கணிப்பை வெளியிட்டு அதிர வைத்த ட்ரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தாக்கத்தில் உயிரிழப்பு குறித்து மாற்றி மாற்றிக் கூறிய ட்ரம்ப், தற்போது ஒரு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 34 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இது. இதையும் சேர்த்து, அமெரிக்காவில் வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 11 லட்சத்து, 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில், 1,947 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை, 67 ஆயிரத்தை கடந்துள்ளது.
'இந்த வைரசால், 1 முதல் 2.2 லட்சம் பேர் உயிரிழப்பர்' என, வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு குழு எச்சரித்திருந்தது. ஆனால், அதிபர் டிரம்ப், பலமுறை, தன் கணிப்பை மாற்றி வந்துள்ளார். முதலில், 60 ஆயிரம் பேர் உயிரிழப்பர் என்று கூறிய அவர், பின், 70 ஆயிரம் என, தன் கணிப்பை உயர்த்தினார். தற்போது, ஒரு லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்ப் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் நாட்டில், 2.2 லட்சம் பேர் இறப்பர் எனக் கூறினர். ஆனால், நம் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால், லட்சக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். அதிகபட்சம், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர் என, நினைக்கிறேன். எனினும் கொரோனாவால் நாட்டை எப்போதும் முடக்கியே வைத்திருக்க முடியாது. இந்த ஆண்டின் இறுதியில் கொரோனா வைரசுக்கு மருந்து கிடைத்துவிடும்’ என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...
- ஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...
- ‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..!
- 'எங்கேயும் இறைச்சி கிடைக்கல'... களத்தில் 'இறங்கிய' அமெரிக்கர்கள்... 'அதிகரிக்கும்' எண்ணிக்கையால் 'அதிர்ச்சியில்' ஆர்வலர்கள்...
- 'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'?... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே!
- கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்?
- மாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்!
- 'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...
- 'சிறப்பான' நடவடிக்கைகளால்... இந்தியா 'தலைமைப்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளது... 'பாராட்டித்தள்ளிய' நாடு!
- தமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களில்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...