"நரகத்துக்கு தான் போகணும்னாலும் எனக்கு ஓகே".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திகிட்ட டிவிட்டர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போட்டுள்ள ட்வீட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | மர்லின் மன்றோவின் ரெக்கார்டு பிரேக்கிங் ஓவியம்.. 4 நிமிஷத்துல முடிஞ்ச ஏலம்.. விலையை கேட்டா தலையே சுத்திடும்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

பரபரப்பை கிளப்பிய ட்வீட்

நேற்று மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில்," ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில் பல்வேறு மக்கள், எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துவந்தனர்.

இந்நிலையில் இன்று, எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில்," உங்களுடைய ஆசிர்வாதங்களுக்கு நன்றி. நரகத்திற்கு செல்வதே எனது இலக்காக இருந்தால் அதுவும் எனக்கு ஓகே தான். இதுவரை பிறந்தவர்களில் பெரும்பான்மையான மக்கள் அங்கேதான் இருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தங்களது இணைய சேவையை தாக்கி வருவதன் காரணமாக, ஸ்டார்லிங் திட்டத்தின் மூலமாக இணைய சேவையை வழங்கும்படி உக்ரைன் அரசு எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவையை அளிப்பதாக அறிவித்தார் மஸ்க். இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்கோஸ்மோஸ் அமைப்பின் இயக்குனர் டிமிட்ரி ஒலெகோவிச் ரோகோசின், ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை என ஒரு பதிவையும் மஸ்க் நேற்று பகிர்ந்திருந்தார்.

அந்த அறிக்கையில், டிமிட்ரி ஒலெகோவிச் ரோகோசின் நேரடியாக எலான் மஸ்க்கின் நடவடிக்கைள் குறித்து விமர்சித்திருந்தார். அதற்குப் பின்னரே மரணம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், நரகத்திற்கு செல்வதும் ஓகே தான் என மஸ்க் டிவிட்டரில் தெரிவித்திருப்பது, உலக அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ELON MUSK, TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்