''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினால் பயன் கிடைக்கவில்லை என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலனைத் தருவதாக அமெரிக்க மருந்து துறை பரிந்துரைத்ததையடுத்து, அதிபர் ட்ரம்ப் அதனை உலக நாடுகளுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து இந்த மருந்தை வாங்க உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அம்மாத்திரைகள் பெரும் எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

அமெரிக்கா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன

இந்நிலையில் அமெரிக்காவில் பெருகிவரும் உயிரிழப்புகளை பார்க்கும்போது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை என்பதையே காட்டுவதாக அமெரிக்க மருந்துத்துறை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகளை நோயாளிகளிடம் ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்