'ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துல பக்க விளைவுகள் அதிகம்...' 'இதயம் முழுக்க விஷம் ஏறியிருக்கு...' பிரபல டாக்டரின் ஆய்வு முடிவு...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு தற்போது பயன்படுத்தி வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்தவில்லை என தற்போது அமெரிக்காவில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸின் கோரப்பிடிக்கு அதிக அளவில் பாதித்த நாடு அமெரிக்கா. இங்கு உயிரிழப்புகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதுவரை முறையான சிகிச்சை முறையும், மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோவிட் 19 தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்திய பிரதமரிடம் ஹைட்ராக்ஸி குளோரோசில் மருந்தும் ஏற்றுமதி செய்ய இருந்த தடையை நீக்குமாறும் கூறியிருந்தார். அதையடுத்து மத்திய அரசு அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் பால் ஆஃபிட் எழுதியுள்ள கட்டுரை வெளியாகி உள்ளது. இதில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதயம் முழுவதும் நச்சுத்தன்மையுடன் காணப்பட்டதாகவும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்த 2 புள்ளி 8 விழுக்காடு பேர் இறந்துள்ளனர். மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக் கொள்ளாத நோயாளிகளில் 4 புள்ளி 6 விழுக்காடு பேர் இறந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து பார்க்கப்போனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஓரளவுக்குத்தான் உதவுமே தவிர இது மருந்து அல்ல எனவும், இதை முழுமையாக நம்பி நாம் எல்லோருக்கும் இதை அளிக்க முடியாது, இதயத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பால் ஆஃபிட் தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கை' நீக்குனதுக்கு அப்பறமும்.. மக்கள் இத 'கண்டிப்பா' ஃபாலோ பண்ணியே ஆகணும்.. மருத்துவர் அறிவுறுத்தல்..!
- 'காரை வீடாக்கிய டாக்டர்...' 'ஃபேமிலி கூட வீடியோ கால் பண்ணி பேசுறேன்...' மனைவி, குழந்தைக்கு கொரோனா வரக்கூடாது என டாக்டர் எடுத்த முடிவு...!
- 'எங்க ஃபேமிலில யாருக்கும் பரவிடக் கூடாது, அதான்...' அவங்களோட சப்போர்ட் தான் ரொம்ப முக்கியம்...' கண்கலங்கிய மருத்துவர்...!
- 'நான் கொரோனா வார்டுல வொர்க் பண்ணல...' 'டாக்டரை டார்ச்சர் பண்ணின பக்கத்துக்கு வீட்டுக்காரர்...' வைரலாகும் வீடியோ...!
- 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க, என் குழந்தை தவிச்சுக்கிட்டு இருக்கும்...' 'பணத்துக்கு நான் எங்க போவேன், சிங்கிள் டீ வாங்கக்கூட...' மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
- 'சென்னை டாக்டருக்கு கொரோனா...' 'விமான நிலைய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தவர்...' தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை...!
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'எனக்கு கல்யாணம் முக்கியம் இல்ல...' 'இன்னொரு தேதியில கூட பண்ணிக்கலாம், ஆனால்...' பெண் மருத்துவரின் தன்னலமற்ற அறம்...!
- எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!
- ‘டெல்லி மாநாட்டை அட்டென்ட் பண்ணிட்டு.. அசால்டாக மருத்துவம் பார்த்துவந்த தமிழ்நாடு டாக்டர்!’.. கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை!