'மனைவிக்கு கேன்சர் சிகிட்சை' ... 'கொரோனா'னால ஹாஸ்பிடல் உள்ள போக முடியல ... 'ஆனாலும் உன்ன விட்டு போகமாட்டேன்' ... "கணவர்" செய்த மனதை உருக்கும் 'செயல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் கோனர். இவரது மனைவி கெல்லிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கீமோதெரபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோயாளிகளின் உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் ஆல்பர்ட்டிற்கு தன் மனைவி கெல்லியுடன் இருக்க முடியவில்லை.

கீமோதெரபி சிகிச்சைக்காக தனி வார்டில் கெல்லி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறையின் ஜன்னல் வழியாக கெல்லி கண்ட காட்சி கெல்லியின் கண்ணில் கண்ணீர்களை வரவழைத்தது. மனைவியை விட்டுப் பிரிந்து இருக்க மனமில்லாத ஆல்பர்ட், மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில் அமர்ந்து கொண்டு தனது ஆதரவை காட்டினார். கெல்லி இருந்த வார்டின் ஜன்னல் வழியாக ஆல்பர்ட் இருக்கும் கார் பார்க்கிங் பகுதி தெரியும் என்பதால் ஆல்பர்ட் அப்பகுதியை தேர்ந்தெடுத்தார்.

மேலும் ஆல்பர்ட் வெள்ளை போர்டு ஒன்றில், 'உன்னருகில் என்னால் இருக்க முடியவில்லை என்றாலும், உனக்காக நான் இங்கு இருக்கிறேன். ஐ லவ் யூ' என குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட கெல்லி கணவனின் அன்பை கண்டு மெய்சிலிர்த்து போய்விட்டார். கெல்லி அதனை புகைப்படம் எடுத்து வெளியிட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து ஆல்பர்ட் கூறுகையில், 'சிகிச்சையின் போது என் மனைவியுடன் இருப்பதாக வாக்களித்திருந்தேன்.  ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வெளியாட்கள் யாரையும் நோயாளிகள் அருகில் அனுமதிக்கமாட்டோம் என மருத்துவர்கள் கூறியதால் இங்கிருந்து என் மனைவிக்கு ஆதரவளிக்க விரும்பினேன்' என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்