கூல் டிரிங்க்'ல கெமிக்கல் வாடை.. உடலில் நோய்கள்.. சந்தேகப்பட்டு கிச்சன்ல கேமரா வெச்ச கணவருக்கு பேரதிர்ச்சி‌!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலிஃபோர்னியாவின் Orange County என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜாக் சென். மருத்துவரான இவரது மனைவியின் பெயர் எமிலி (Yue Emily Yu).

Advertising
>
Advertising

Also Read | 20 ரூபாயால் தொடரப்பட்ட வழக்கு.. "சுமார் 22 வருசத்துக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு.!!"

எமிலியும் மருத்துவராக இருந்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், தான் எடுத்துக் கொள்ளும் குளிர் பானங்களில், ஏதோ கெமிக்கல் வாசனை வருவதை ஜாக் சென் கவனித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஜாக் சென்னிற்கு அல்சர் உள்ளிட்ட வயிறு தொடர்பாக நிறைய பிரச்சனைகள் உருவாகி காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது வீட்டின் சமையலறையில் கேமரா ஒன்றை கணவர் ஜாக் சென் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது தான், கேமராவில் பதிவாகி இருந்த காட்சியைக் கண்டு அவர் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார். தனது மனைவியான எமிலி, தான் குடிக்க இருக்கும் பானத்தில், ஏதோ கெமிக்கல் தொடர்பாக விஷம் கலந்ததை ஜாக் சென் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆரம்பத்தில், அவர் எடுத்த வீடியோவில், மனைவி தனது பானத்தில், விஷம் கலந்த மருந்தினை ஊற்றுவது சரிவர தெரியவில்லை என கூறப்படுகிறது. இதற்கேற்ப, சமயலறையில், அனைத்து பொருட்களையும் நீக்கி விட்டு, கேமராவை வைத்த போது, தான் குடிக்கும் பானத்தில் தான் மனைவி மருந்தினை ஊற்றுகிறார் என்பது உறுதியானதாக ஜாக் சென் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைக் கண்டதும் அவர் நடுங்கி போகவே, தன்னுடைய உடல் பிரச்சனைகளுக்கும் மனைவி தான் காரணம் என்றும் ஜாக் முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, இது பற்றி புகார் ஒன்றையும் தனது மனைவி மீது ஜாக் சென் அளிக்க, வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், எமிலியை போலீசார் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, திருமணமான நாள் முதலே தனது மனைவி, மிகவும் வித்தியாசமாக தான் இருப்பார் என்றும், தங்களின் குழந்தைகளிடம் கூட கண்டிப்பாக தான் எப்போதும் இருப்பார் என்றும் மருத்துவர் ஜாக் சென் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கவும் ஜாக் சென் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், அதே வேளையில், எமிலிக்காக வாதாடி வரும் வக்கீல் ஒருவர், அந்த கேமரா காட்சியில் எமிலி மருந்தினை எடுத்து கணவரின் பானத்தில் ஊற்றுவது தெளிவாக இல்லை என்றும், அவர் வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதனை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஜாக் சென் தான் விவாகரத்து வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்த வாரத்திற்கு இதன் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | சத்தம் போட்டு சிரிச்ச ஆனந்த் மஹிந்திரா.. "அதுக்கு அவங்க மனைவி ரியாக்ஷன் இது தான்.." வைரலாகும் தொழிலதிபரின் 'ட்வீட்'

HUSBAND, HUSBAND CLAIMS, WIFE, CAMERA, KITCHEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்