எங்க 'ஓட' பாக்குறீங்க?... 'எல்லையில்' சிக்கிய 'தம்பதி'... 'வடகொரிய' அதிகாரிகளின் 'கொடூர' செயல்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், சீன நாட்டின் அருகே அமைந்துள்ள வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வடகொரியாவின் நடக்கும் செய்திகள் என்பது எப்போதும் மர்மம் நீடிக்கும் ஒன்று தான். பத்திரிகையாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்திகளை கசிய விட்டால் அவர்கள் கதி திண்டாட்டம்தான். சில தினங்களுக்கு முன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், அவர் உயிரிழந்ததாகவும் பல்வேறு வதந்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், வடகொரியாவின் ரியான்காங் மாகாணத்திலுள்ள ஹியென்சன் என்ற இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவருடன், மனைவியின் இளம் சகோதரரின் 14 வயது மகனும் வசித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக அந்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தென்கொரியாவை சேர்ந்த அந்த பையனை அவனது சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு தாங்களும் சீனாவிற்கு தப்பியோட நினைத்துள்ளனர்.
இரு நாட்டுக்கும் இடையே, யாலு ஆறு ஓடும் நிலையில் அதன் மூலம் கடக்க முயற்சித்துள்ளனர். ஆனால் வடகொரிய அதிகாரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர். சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்த நிலையில், அந்த தம்பதியை சில நாட்கள் கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வடகொரியாவில்' நடக்கும் விரும்பத்தகாத 'விஷயங்கள்...' 'அதிகரிக்கும் சந்தேகம்...' "கிம்மின் நிலை என்ன?" "அடுத்து அங்கு நடக்கப் போவது என்ன?..."
- 'பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் ஜாங் உன்...' 'யூகங்களுக்கு முற்றுப்புள்ளி...' 'புகைப்படத்துடன் வெளியான செய்தி...'
- 127 கிலோ 'வெயிட்'... சீனா 'சூப்னா' கொள்ளை இஷ்டம்... வடகொரிய அதிபர் குறித்து வெளியான 'புதிய' ரகசியங்கள்!
- ''கிம் உயிரோடு தான் இருக்கிறார்...'' ''ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் தெரியுமா?...'' 'வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி அளித்த தகவல்...'
- ‘பல்வேறு யூகங்களுக்கு மத்தியில்’... ‘40 ஆண்டுகள் புறக்கணிப்பிற்குப் பின் வெளிவரும்’... ‘வடகொரியா அதிபரின் சித்தப்பா பெயர்’... ‘என்ன காரணம்?’
- 'கிம் எங்கிருக்கிறார் என்பது...' 'எங்களுக்கு மட்டுமே தெரியும்...' 'தென்கொரிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கியத் தகவல்...'
- ‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’!
- 'கிம் ஜாங் உன்' பூரண நலம் பெற 'வாழ்த்துகிறேன்...' 'ஆரோக்கியத்துடன்' இருக்கிறார் என 'நம்புகிறேன்...' "வாழ்த்து கூறியவர் யார் தெரியுமா...!"
- 'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'
- கொரோனா 'டச்' செய்யாத "15 நாடுகள்"... 'உலகமே' திணறிக் கொண்டிருக்க... 'அந்த' நாடுகளில் நிகழ்ந்தது என்ன?