'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பால் 5 நாட்களில் சுமார் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீன அரசு.
சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றை நிலைகுலைய செய்துள்ளது எனலாம். தற்போது வெகு சில நாடுகளே கொரோனா தொற்றை ஒழித்ததாக மகிழ்ச்சியடைந்து வருகிறது. சீனாவும் சில வாரங்களுக்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கை தளர்த்தியது மேலும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையினை நடத்த தொடங்கினர். வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று உள்ளது என்றும் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று ‘மிகத் தீவிரமாக' மாறி வருகிறது என பீஜிங் நகரின் அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட பீஜிங்கின் ஷின்ஃபாடி மொத்த உணவுச் சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீஜிங்கில் இருந்து நகரை வீட்டு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளது. மேலும், உள் அரங்க விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்குக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன
மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு தரப்பு விதித்துள்ளது. மேலும் பீஜிங் நகரில் செயல்படும் உணவுச் சந்தைகளில் வேலை பார்ப்பவர்கள், அரசு கேன்டின்கள் நடத்துபவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறது சீன அரசு. தினமும் பீஜிங் நகரில் மட்டும் சுமார் 90,000 பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
பீஜிங் அருகேயுள்ள ஹீபே மாகாணத்திலும் சில கொரோனா வைரஸ் பாதித்தோரையும் கண்டறிந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நடிகருக்கு மரண தண்டனை...' 'போதைப்பொருள்' கடத்தியதாக 'குற்றச்சாட்டு...' 'சீனாவின்' செயலால் 'ஆத்திரமடைந்த நாடு...'
- 'பரிசோதிக்கப்படும்' 3-ல் ஒருவருக்கு கொரோனா 'பாஸிடிவ்...' 'எல்லை மீறி போய் விட்ட நகரம்...' 'அதிர்ச்சி' அளிக்கும் 'ரிப்போர்ட்...'
- தினமும் '1 லட்சம்' பேருக்கு கொரோனா 'பரவுகிறது...' 'இது சரியான போக்கு இல்லை...' 'எச்சரிக்கும்' உலக சுகாதார 'அமைப்பு...'
- வரவேற்பில் திடீரென 'மயங்கி' விழுந்த மாப்பிள்ளை... திருமணத்தில் பங்கேற்ற '70 குடும்பத்தினருக்கும்' காத்திருந்த அதிர்ச்சி!
- 'சென்னை' டூ உடுமலை பயணித்த.... 81 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி... விடிய,விடிய 'சல்லடை' போட்டு தேடி ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற அதிகாரிகள்!
- திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- “ஆம்பளன்னா சுடுங்க பாப்போம்!”.. 'போலீசுக்கும் டாக்டருக்கும்' நடந்த வாக்குவாதம்!.. சோதனைச்சாவடியில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'.. 'வீடியோ'!
- 'கொரோனாவைக் கருவறுக்க "மைக்ரோ" திட்டம்!'.. தமிழக அரசு அதிரடி!.. சென்னையில் அடுத்து நடக்கப் போவது என்ன?
- இதயத்தை ரணமாக்கும் சோகம்!.. தமிழகத்தில் இன்று மட்டும் 44 உயிர்களை கொலையுண்ட கொரோனா!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவிற்கு மத்தியிலும்... ஐடி ஊழியர்களுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'பிரபல' நிறுவனம்!