படகு மேலே விழுந்த திமிங்கிலம்.. உறைந்துபோன பயணிகள்.. உலக வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சுற்றுலா படகின் மேலே திமிங்கிலம் ஒன்று விழுந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Also Read | "சுவத்துக்குள்ள இருந்து தான் சத்தம் வருது"..பூஜை அறைக்குள்ள வந்த விருந்தாளி.. பதறிப்போன குடும்பம்..!
மெக்சிகோவில் உள்ள கலிபோர்னியா வளைகுடாவின் அஹோம் என்ற கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் திமிங்கிலம் ஒன்று சுற்றுலா படகின் மீது விழுந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் சுற்றுலா படகில் பயணம் செய்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படகின் மீது திமிங்கிலம் விழுவதை அருகில் சென்ற படகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட அது தற்போது வைரலாக பரவிவருகிறது.
4 பேர் காயம்
திமிங்கிலம் விழுந்த படகில் பயணித்த 4 பேரில், இரு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கிலம் மோதியதால் காயமடைந்த நால்வரும் லாஸ் மோசிஸ் பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மற்றொரு ஆணுக்கு நெஞ்செலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னொருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், அஹொம் கடல்பகுதியின் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒமர் மெண்டோசா சில்வா திமிங்கிலம் தனக்கு ஆபத்தாக உணரும் சூழ்நிலையில் தான் இப்படி செயல்படும் எனவும் சுற்றுலா படகுகள் திமிங்கிலங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அஹொம் பகுதி மேயர் ஜெரார்டோ வர்காஸ் இதுபற்றி பேசுகையில்," திமிங்கிலங்களின் பிரம்மாண்ட அழகை நாம் தூரத்தில் இருந்து மட்டுமே ரசிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும்" என எச்சரித்துள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலங்களில் ஹம்பக், நீல திமிங்கிலங்கள் மாற்றும் பசிபிக் க்ரே திமிங்கிலங்கள் இந்த பகுதிக்கு வருவது வழக்கமாகும். ஆனாலும், இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக இப்போது நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மெக்சிகோவில் திமிங்கிலம் ஒன்று விழுந்ததால் படகு சேதமடைந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
"சுவத்துக்குள்ள இருந்து தான் சத்தம் வருது"..பூஜை அறைக்குள்ள வந்த விருந்தாளி.. பதறிப்போன குடும்பம்..!
தொடர்புடைய செய்திகள்
- 100 வயதான மரம்.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்.. கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய மக்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- நடுவானத்துல திடீர்னு திறந்த விமானத்தின் கதவு.. 20 நிமிஷம் உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு பயணிகள் செஞ்ச காரியம்..
- விமானத்துல விடாம அழுதுகிட்டே இருந்த குழந்தை... பயணிகள் செஞ்ச ஸ்வீட் வைத்தியம்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!
- ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்..!
- என் மாமியாருக்கு கிட்னிய கூட கொடுத்தேன்.. ஒரே மாசத்துல என் காதலி இப்படி பண்ணிட்டு போவான்னு கனவுல கூட நினைக்கல.. கண்ணீரில் காதலன்
- ‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’!.. கல்லறைக்கு அடுத்தடுத்து வரும் உடல்கள்.. கண்ணீருடன் விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- 'காதலனுடன்' காரில் சென்ற போது நேர்ந்த 'விபத்து'... 'பெண்ணை' அழைத்துச் செல்ல ஸ்பாட்டிற்கு வந்த நபரால்... போலீசாருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!
- “ஏறுனதுமே இப்படி இருக்கு.. பிரார்த்தனை பண்ணிக்கங்கனு சொன்னா!” - கடலில் விழுந்த விமான பயணிகளின் உறவினர்களின் கதறல் ஓலம்!
- "ரொம்ப நாளா வீட்டிற்கு அடியில் இருந்த 'சுரங்கம்'.. இது எப்படி எனக்கு தெரியாம போச்சு??..." ஷாக்கான 'கணவர்'... இறுதியில் மனைவியால் காத்திருந்த 'பேரதிர்ச்சி'!!!
- VIDEO : "நான் இங்க பேசிட்டு இருக்கேன் மா",,.. வீடியோ காலில் பெண் 'அரசியல்வாதி' செஞ்ச 'வேலை'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!