‘எவரெஸ்ட்டில் டிராஃபிக் ஜாம்’ ஏற்பட்டு ஏழு பேர் பலியான சோகம்.. கூட்டத்தால் அதிகரிக்கும் மரணங்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் உயரமான மலை உச்சியை அடைய பலரும் நீண்ட வரிசையில் நிற்பதை நிர்மல் பூர்ஜா என்பவர் படமெடுத்து பதிவிட, அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த சீசனில் இங்கு மலையேற 381 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் நேபாள அரசுக்குக் கிடைத்த வருமானம் 11,000 டாலர்கள். இந்த ஆண்டு மோசமான வானிலை காரணமாக ஏறும் நாட்கள் குறைந்ததால் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஏறும்படி இருந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் உச்சியை அடைவதற்கும், அதற்கு முந்தைய நிறுத்தமான 8,790 மீட்டர் உயரத்திலுள்ள ஹிலாரி ஸ்டேப்புக்கும் இடையே 350-க்கும் மேற்பட்ட மக்கள் இருந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. 12 மணி நேரத்திற்கும் மேல் இருந்த நெரிசலில் மூச்சுத் திணறலாலும், திரும்பி கீழே வரும் போது சிலரும் பலியானதாகக் கூறப்படுகிறது. இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் கடைசியிலிருந்து மே கடைசி வரையான சீசனில் இங்கு 700 பேர் வரை வருவார்கள் எனக் கூறப்படுகிறது. முன்னதாக 2015-ல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகள் இங்கு வழக்கம் என்பதை ஏற்றுக்கொண்டே பலரும் மலை ஏறுகின்றனர்.

MOUNTEVEREST, TRAFFICJAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்