பல கிலோமீட்டருக்கு கடலில் மிதக்கும் மர்ம திரவம்.. "கச்சா எண்ணெய் இல்லை.. இது வேறே ஏதோ"..குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவீடன் மற்றும் பின்லாந்து இடையே உள்ள பால்டிக் கடலில் பல கிலோமீட்டர் பரப்பளவிற்கு மர்ம திரவம் மிதப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

ஐரோப்பாவின் சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது பால்டிக் கடல். இங்கே, சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு இடையே சுமார் 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மர்மமான எண்ணெய் மிதப்பதாக சுவீடன் கடற்படை தெரிவித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை முதன்முறையாக இந்த எண்ணெய் கசிவை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவை கச்சா எண்ணெய் இல்லை எனவும், எப்படி இவ்வளவு எண்ணெய் கடலுக்கு வந்தது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

என்னென்ன தெரியல

இந்த மர்ம எண்ணெய் குறித்து சுவீடன் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இது புதன்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது மினரல் ஆயில் கிடையாது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக எந்த தீங்கும் ஏற்படாது. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடல் பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்கள் ஏதேனும் நடைபெறுகின்றனவா? என்பதைக் கண்டறியவும் முயன்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இக்கடல் பகுதியில் இருக்கும் கப்பல்கள் எங்கே செல்கின்றன? அவற்றில் இருக்கும் சரக்கு குறித்தும் விசாரித்துவருகின்றனர் காவல்துறையினர்.

ஒருவாரம் ஆகும்

இதுகுறித்துப் பேசிய சுவீடன் கடலோர காவல்படை விசாரணையின் தலைவரான ஜொனாடன் தோலின்,"புதிய வகை எரிபொருள்கள் கடலில் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன . உதாரணமாக பையோ எரிபொருட்கள் போன்றவை தண்ணீரில் பல விதமாக வினைபுரியும். அதன்மூலம் அந்த பொருளை அடையாளம் காண்பது சிரமமான காரியம். ஆய்வில் இருக்கும் மாதிரிகளை கொண்டு இவை என்ன என்பது தெரிய ஒருவாரமாகும்" என்றார்.

மேலும், கடலில் மிதக்கும் எண்ணெய் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பால்டிக் கடலில் பல கிலோமீட்டருக்கு மர்ம திரவம் மிதப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

BALTICSEA, OILSPILL, SWEDEN, திரவம், பால்டிக்கடல், சுவீடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்