மொத்தமா வற்றிய 'ஆறு'.. அடியில் தென்பட்ட விஷயம்.. "உள்ளூர் ஆளு பாத்துட்டு மிரண்டு போய்ட்டாரு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடுமையான வறட்சி காரணமாக, ஆறு ஒன்றின் அடிப்பகுதியில் தென்பட்ட விஷயம், பலரையும் தற்போது மிரள வைத்துள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவில் Mississippi ஆறு அமைந்துள்ளது. இதனிடையே, சமீப காலமாக அப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான நீர்நிலைகள் உள்ளிட்டவை வரலாறு காணாத அளவிற்கு வற்றி போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், Mississippi ஆறில் இருந்த நீரும் முற்றிலுமாக வற்றி போய் அதன் அடிப்பகுதி வரை வெளியே தெரிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில் தான், அந்த ஆற்றின் அடியில் இருந்த விஷயம் வெளியே தென்பட ஆரம்பித்து பரபரப்பை கிளப்பி உள்ளது.

உள்ளூர்வாசியான Patrick Ford என்பவர், ஆற்றில் கலைப்பொருட்கள் தேடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வற்றிக் கிடந்த Mississippi ஆற்றை கவனித்துள்ளார். அங்கே வர்த்தக கப்பல் ஒன்று நீருக்கு அடியில் இருந்ததைக் கண்டு பேட்ரிக் வியந்து போயுள்ளார்.

ஒரு கப்பலின் பல பாகங்கள் அங்கே தென்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய கப்பல் தான் அது என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னர், இந்த கப்பல் குறித்து நிபுணர்கள் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவித்து அது பற்றி இன்னும் அரிய தகவல்களை தெரிய பேட்ரிக் முயற்சி செய்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகள் முடிவில், தொல்பொருள் ஆய்வாளரான Chip McGimsey என்பவர், பல வியக்கத்தக்க தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 1896 ஆம் ஆண்டு, வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்ட கப்பல் இது என்பதும், 1915 ஆம் ஆண்டு கடும் புயல் ஒன்றின் காரணமாக, மற்றொரு கப்பலுடன் நீரில் மூழ்கி போனதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த கப்பல்களில் இருந்த மரக்கட்டைகள் மோதி, புயலுக்கு மத்தியில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கப்பல் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடும் வறட்சி காரணமாக வற்றி போன ஆற்றில் இருந்து சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் வெளியே தென்பட்ட கப்பலும் அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

RIVER, DROUGHT, SHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்