விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் மிகப்பெரிய காமேட் எனப்படும் வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நாசா
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மிகப்பெரிய வால் நட்சத்திரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து உள்ளது. பனியால் ஆன இதன் கரு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது என நாசா தெரிவித்திருக்கிறது. மேலும் இதுவரை அறியப்பட்ட வால்மீன்களின் கருவை விட இது 50 மடங்கு பெரியது எனவும் இது சுமார் 500 டிரில்லியன் டன் நிறை கொண்டதாகவும் நாசா அறிவித்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரம், சூரியனுக்கு அருகில் காணப்படும் வழக்கமான வால் நட்சத்திரத்தை விட ஒரு லட்சம் மடங்கு பெரியது. இது அறிவியல் உலகில் மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.
வால் நட்சத்திரம்
சூரிய மண்டலத்தில் உள்ள தூசுக்கள், கற்கள் மற்றும் பனி உள்ளிட்டவற்றால் உருவாகும் வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும்போது அதன் பல்வேறு வகையான தாக்கங்களால் வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தூசும், வாயுக்களும் தள்ளப்படும். அதுதான் நீண்ட வால் போல அமைய காரணமாக அமைகிறது. அவற்றின் மீது சூரிய ஒளிபடும் போது அது வால் போல் தோற்றம் அளிக்கும்.
முன்னதாக C/2002 VQ94 என்னும் வால் நட்சத்திரத்தை லிங்கன் நியர் எர்த் ஆஸ்டிராய்டு ஆராய்ச்சி (LINEAR) திட்டத்தின் மூலம் கண்டறிந்தது நாசா. இதன் கரு 60 மைல் நீளம் கொண்டதாகும். இந்த சாதனையை இப்பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெஹிமோத் வால் நட்சத்திரம் (C/2014 UN271) முறியடித்திருக்கிறது.
பூமிக்கு பாதிப்பா
தற்போது சூரிய மண்டலத்தின் விளிம்பில் இருந்து மணிக்கு 22 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்துவரும் இந்த வால் நட்சத்திரம் 2031 ஆம் ஆண்டிற்கு பிறகு இருக்காது எனவும் நாசா தெரிவித்திருக்கிறது. சூரியனில் இருந்து 1 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்க வாய்ப்பில்லை என்கிறார்கள் நாசா ஆய்வாளர்கள்.
1990 ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இந்த வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறது. விண்வெளி வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வால் நட்சத்திரத்தை நாசா கண்டுபிடித்திருப்பது அறிவியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 10 நாள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள 3 தொழிலதிபர்கள்..கட்டணம் எவ்வளவு தெரியுமா?
- "கடல் அரக்கன் அது".. திமிங்கிலங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ராட்சத உயிரினம்.. மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!
- அடேங்கப்பா.. 300 வருசம் பழமையான 'மம்மி'.. "பாக்க கடல் கன்னி மாதிரியே இருக்கு.." ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி தகவல்
- "500 டன் வெயிட்டு.. இந்தியா மேல விழுந்தா என்ன பண்ணுவீங்க..?" தூக்கிவாரிப் போட வைக்கும் ரஷ்யாவின் பரபரப்பு கேள்வி..!
- 40 சாட்டிலைட்டும் காலி.. விண்வெளியில் நடந்த சம்பவம்.. 750 கோடி நஷ்டத்தில் எலான் மஸ்க்..!
- நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!
- விண்வெளி'லயும் சாப்பாடு தான் பிரச்சன போல.. முழிக்கும் நாசா.. ஐடியா குடுத்தா 7.4 கோடி ரூபாய் பரிசு குடுக்குறாங்களாம்
- பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள் - பாதை கொஞ்சம் மாறினா.. அவ்வளவுதான் நாசாவின் பகீர் அறிவிப்பு..!
- ஏலியன்களை எதிர்கொள்ள ‘பூசாரி’-யை நியமனம் செய்துள்ள நாசா..!- பயிற்சிக்காக என விளக்கம்!
- விண்வெளியில் 'உடலுறவு' வச்சிக்க முடியுமா...? 'ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்...!