எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்வீடனின் அணுகுமுறையால் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு இன்றி சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 50 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது, வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிபவர்கள் அதை செய்யலாம் போன்ற கட்டுப்பாடுகளே அங்கு விதிக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு இணையதள வகுப்புகள் இருந்தாலும், பள்ளிக் குழந்தைகள் வகுப்பிற்கே செல்கின்றனர்.
அத்துடன் அலுவலகங்கள், உணவகங்கள், சலூன்கள் போன்றவை வழக்கம்போல திறந்துள்ள நிலையில், சுமார் 1.03 கோடி மக்கள்தொகை கொண்ட அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 21 ஆக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்பெயினில் உயிரிழப்பு விகிதம் 44 ஆகவும், இத்தாலியில் உயிரிழப்பு விகிதம் 49 ஆகவும் உள்ளதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாவும், தங்களுடைய நாட்டிற்கு இந்த அணுகுமுறையே சரியானது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அணுகுமுறையால் அங்கு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் டென்மார்க்கில் லட்சம் பேரில் இறப்பு விகிதம் 7 ஆகவும், நார்வே மற்றும் பின்லாந்தில் 4 ஆகவும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் ஸ்வீடனின் நிலை மோசமாவதற்குள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதுவரை ஸ்வீடனில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 2,200 பேர் உயிரிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2 நாட்களாக 'நம்பிக்கை' கொடுத்த எண்ணிக்கை... 'மீண்டும்' ஒரே நாளில் 'உயர்ந்துள்ள' உயிரிழப்பால் 'அதிர்ச்சி'..
- 'சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு கொரோனா'... 'ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு'... கடைக்கு போனவங்க லிஸ்ட் எடுக்கும் பணி தீவிரம்!
- ‘அம்மாவை பார்க்க 480 கிமீ சைக்கிளில் வந்த மகன்’.. தாயை பார்த்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!
- நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு.. சந்தோஷமாக அறிவித்த அதிகாரிகள்..!
- இது இந்தியாவுக்கு கெடைச்ச 'சாதக வரம்'... 'கண்டிப்பா' நாம இதை செய்யணும்... சீனாவுக்கு 'ஆப்பு' வைக்க செம ஸ்கெட்ச்?
- 'அந்த' சிகிச்சையை பயன்படுத்தாதீங்க... 'சட்ட' விரோதமான செயல்: மத்திய அரசு எச்சரிக்கை
- 'லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா?'... 'மெயில் எப்ப வரும்'... 'கதிகலங்கி நிற்கும் ஊழியர்கள்'... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்!
- 1 கோடி மதிப்புள்ள 'பீர்' பாட்டில்கள வச்சுக்கிட்டு... எத்தனை நாளைக்கு இப்டி 'பயந்து' நடுங்குறது?
- மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!
- 'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...!