"நீங்க தொட்டாலே போதும்..." "நொடியில் தொற்றிக் கொள்ளும்..." "பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்..." 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்பதை விளக்கும் விழிப்புணர்வு வீடியோவை இத்தாலி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் தற்காப்பு நடவடிக்கைகளை எப்படி ஒவ்வொருவரும் மேற்கொள்வது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உலகில் உள்ள 162 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும், ஈரானும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் மட்டும் இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர். 23,073 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

கொரோனா தொற்று உள்ளவருக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளியை தொடும் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதன்மூலமும் கொரோனா பரவுகிறது என்பது அந்த வீடியோ மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ மூலம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், நோயாளிகளை அணுகும்போது உரிய பாதுகாப்பு கவசங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

CORONA, ITALY, SPREAD, INFECTION, VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்