'எங்க இருந்து இவ்வளவு காசு வருது'... 'விழிபிதுங்க வைக்கும் தாலிபான்களின் சொத்து மதிப்பு'... இதுவரை அமெரிக்கா செலவிட்ட மொத்த தொகை!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களின் மொத்த சொத்து மதிப்பு விழிபிதுங்க வைக்கும் அளவில் உள்ளது.
சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய ஆப்கான் முஜாஹிதீன்களின் ஒரு பகுதியினர் 1994ல் தாலிபான்கள் எனப் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கினர். அதே காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானில் ஒரு கூட்டமைப்பு உருவானது.
ஆனால் உள்நாட்டுப் போர்களால் சிதைந்து போயிருந்த ஆப்கானை தங்களால் சரி செய்து அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநாட்ட முடியும் எனத் தாலிபான்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்பினார்கள். இதையடுத்து கடந்த 1996ம் ஆண்டு காபூல் நகரைக் கைப்பற்றிய அந்த அமைப்பு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவர் பின்லேடனுக்கு தாலிபான்கள் அடைக்கலம் அளித்தனர். இதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அந்த நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாகத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்குப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது. அதிலிருந்து அந்த நாட்டின் கிராமப் புறங்களில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தி புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வந்தனர். படிப்படியாக முன்னேறி வந்த தாலிபான்கள் இன்று தலைநகர் காபூலையும் தங்கள் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தாலிபான்களைப் பொறுத்தவரைக் கடந்த 1990ம் ஆண்டு காலகட்டத்திலிருந்ததை போல தற்போது அவர்கள் இல்லை. உயர் ரக ஆயுதங்கள், புத்தம் புது வாகனங்கள், தகவல் தொடர்புக்குப் புத்தம் புதிய தொழில்நுட்ப சாதனங்கள், தங்கள் கருத்துக்களை வெளி உலகத்திற்குச் சொல்லத் தனியாகச் செய்தி ஊடகம் என தாலிபான்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டார்கள்.
ஆனால் இவ்வளவிற்கும் பணம் எங்கிருந்து வருகிறது என்பது தான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. தாலிபான்களின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது சுரங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தான். அதற்கு அடுத்த படியாக வெளிநாடுகளிலிருந்து தாலிபான்களுக்கு நிதி குவிந்து வருகிறது.
கடந்த 2017-18ம் காலகட்டத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் வெளிநாட்டு நிதி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 10 தீவிரவாத அமைப்புகளின் சொத்துமதிப்பு பட்டியலில் 5வது இடத்தில் தாலிபான் இருந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் தாலிபான்களின் சொத்து மதிப்பு 2800 கோடியாக இருந்த நிலையில், 2019-20ம் காலகட்டத்தில் தாலிபான்களின் சொத்து 4,400 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கடந்த 19 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்காகவும், ஆப்கான் படைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கவும் இதுவரை செலவிட்ட தொகை மட்டும் ''822 பில்லியன் டாலர்'' எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே இரவில் தூக்கி எறியப்பட்ட அந்தஸ்து'!.. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின்... தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- "எங்கள பத்தி விஷமத்தனமான பிரச்சாரம் பண்றாங்க"!.. திடீரென ட்விஸ்ட் கொடுத்த தாலிபான்கள்!.. திரைமறைவில் நடப்பது என்ன?
- உடனே கிளம்புங்க...! 'அடுத்தடுத்து திருப்பம்...' 'கூடுதல் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு...' - என்ன நடக்கிறது...?
- நெருங்கியது Climax!.. தலைநகர் காபூலுக்குள் தடாலடியாக நுழைந்த தாலிபான்கள்!.. உலகமே உற்றுநோக்கும் ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன?
- உங்க மேல வச்சுருக்க 'மரியாதைய' கெடுத்துக்காதீங்க...! 'அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அப்புறம் உங்க தலைவிதி...' - இந்தியாவிற்கு கடும் 'எச்சரிக்கை' விடுத்த தாலிபான்கள்...!
- உங்க 'பொண்ணுங்கள' எங்களுக்கு 'மனைவி' ஆக்குறீங்களா இல்லையா...? 'ரத்தக்கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்...' - தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்...!
- 'நெலமை கைய மீறி போயிடுச்சு'!.. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!.. தாலிபான்களிடம் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை!.. மாஸ்டர் ப்ளான்!
- அடுத்த 'வேட்டையும்' முடிச்சாச்சு... ஆப்கானின் 'முக்கிய நகரத்தை' கைப்பற்றிய தாலிபான்கள்...! இனி அடுத்தது தான் 'மெயின்' டார்கெட்...!
- VIDEO: இது 'எந்த ஹெலிகாப்டர்'னு தெரியுதா...? 'ஆமா நாங்க தான் தூக்கினோம்...' 'போட்டோ வெளியிட்ட தாலிபான்கள்...' - ஹெலிகாப்டர் குறித்து 'பரபரப்பு' தகவல்...!
- தாலிபான்களோட 'பேசினாரா' இம்ரான்கான்...? 'அது' நடந்துச்சுன்னா மட்டும் தான்... - இந்த பிரச்சனைக்கு ஒரு 'முடிவு' கிடைக்கும்...!