'வல்லரசுகளே திணற'... 'எகிறிய பாதிப்பிலிருந்து இந்த நாடு மட்டும் எப்படி மீள்கிறது?'... 'விளக்கமளித்துள்ள நிபுணர்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பாகிஸ்தானில் பாதிப்பு வளைகோடு தட்டையாகி வருவதாக நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஜூன் 14ஆம் தேதியன்று கொரோனா வளைகோடு உச்சம் தொட்டு 6,825 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி 5,248, ஜூன் 16ஆம் தேதி 4,443 என பாதிப்பு எகிறி வந்த நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி பாகிஸ்தானில் பதிவான புதிய கொரோனா பாதிப்புகள் 331, பின்னர் 9, 10,11ஆம் தேதிகளில் முறையே 634, 539, 531 பாதிப்புகள் பதிவாகின. கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 730 புதிய பாதிப்புகளும், 17 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாகிஸ்தானில் 2,85,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானில் 10 லட்சம் பேருக்கு 9,878 பேர் என்ற விகிதத்திலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 10 லட்சத்துக்கு 18,831 பரிசோதனைகளும், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கு 2,20,000 பரிசோதனைகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 லட்சத்திற்கு 5,68,223 பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் லாக்டவுன் முறைகளே தற்போது அங்கு கொரோனா குறைப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது ஹாட்ஸ்பாட்களில் மட்டும் கடுமையான லாக்டவுன் முறை அமல்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த மாநிலத்தின் வாழ்வாதாரங்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளையவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதே அங்கு கொரோனா வளைகோடு தட்டையானதற்குக் காரணம் என சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கராச்சியைச் சேர்ந்த இண்டஸ் மருத்துவமனையின் சி.இ.ஓ. டாக்டர் அப்துல் பாரி ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "தொடக்கத்தில் மக்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களை நம்பி கொரோனாவின் தீவிரத்தை உணரவில்லை. மே மாதத்தில் ஈத் பண்டிகைக்காக லாக் டவுன் தளர்த்தப்பட்ட பின், ஜூன் 2ஆம் வாரத்தில் பாகிஸ்தானில் கொரோனா உச்சம் தொட்டதும் மக்கள் அதன் தீவிரத்தை உணரத் தொடங்கி, தாங்களாகவே எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கிவிட்டனர்.
அரசும் டெஸ்ட் செய்வது, ஒரு நபருக்குத் பாதிப்பு ஏற்பட்டால் அவருடன் தொடர்பிலிருந்த 30 பேரையாவது பரிசோதிப்பது, நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிவது, தனிமைப்படுத்துவது என செயல்பட்டது. பாகிஸ்தான் மசூதிகளைக் கூட மூடாத நிலையில், கண்டிப்பான சமூக இடைவெளி, முகக்கவச நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. நாட்டில் படித்தவர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க, மற்றவர்கள் முகக்கவசம் அணியாமல் தான் வலம் வந்தனர். இதனால் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாப்பிட்டது இந்த இறைச்சியைத் தான்'... 'சீனாவுக்கு வந்த சோதனை'... 'அண்டை நாட்டிலிருந்து பரவும் புதிய நோய்'... பலியான முதல் நபர்!
- பரிசோதனையில் கிடைத்த 'சூப்பர்' ரிசல்ட்... புதிய மைல்கல்லை எட்டிய 'கோவாக்சின்'... பொது பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும்?
- விநாயகர் சதுர்த்திக்கு 'முட்டுக்கட்டை' போட்ட கொரோனா!.. தமிழக அரசு 'அதிரடி' அறிவிப்பு!.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
- 'எங்ககிட்டயே இன்னும் அப்ரூவல் வாங்கல...' மொதல்ல நாங்க டெஸ்ட் பண்ணனும்... உலக சுகாதார நிறுவனம் அதிரடி...!
- 'சென்னையிலேயே அதிகபட்ச பாதிப்புள்ள மண்டலம்'... 'ஆனாலும் ஆறுதல் செய்தியுடன்'... 'வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்'...
- 'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...
- 'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி'... 'ஹெச்-1பி விசா விதிமுறையில் இவர்களுக்கு மட்டும் தளர்வு!'...
- பாகிஸ்தானுடன் உறவு முறிகிறதா...? 'எண்ணெய் சப்ளை-யை ஸ்டாப் பண்ணிய சவுதி...' - இனிமேல் கடனும் கொடுக்க மாட்டோம்...!
- 100 கோடிகளுக்கு குவிந்த ஆர்டர்... அந்த 'தடுப்பூசி' எங்களுக்கு வேணாம்... ஒதுங்கும் 'வல்லரசு' நாடுகள்... என்ன காரணம்? வெளியான 'புதிய' தகவல்!
- 'முட்டாள்தனமான' செயல் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை... 'எதிர்க்கும்' விஞ்ஞானிகள் காரணம் என்ன?