'எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்கள் நீடிக்கும்...' 'கொரோனா எதிர்ப்பாற்றல்' குறித்து புதிய 'ஆய்வு முடிவு...' 'மருத்துவர்கள் விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு அதிகபட்சமாக எத்தனை நாட்களுக்கு எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தாலும், நோயிலிருந்து பெரும்பாலானோர் மீண்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு எத்தனை நாள்களுக்கு எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்ற ஆராய்ச்சியில் மருத்துவர்கள் இறங்கினர்.

ஒரு மனிதருக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவரது உடலில் உள்ள எதிர்ப்புசக்தி தூண்டப்பட்டு, அந்த வைரஸை எதிர்க்க உடலில் எதிர்ப்புரதம் (Antibodies) உருவாகிறது. அதன் மூலம் அவரால் அந்த வைரஸ் தொற்றிலிருந்து மீள முடிகிறது.

சில நேரங்களில் நம் உடம்பில் உருவாகும் எதிர்ப்புரதம், முன்பு தாக்கிய வைரஸை நினைவில் வைத்துக்கொள்கிறது. அப்புரதம் அடுத்தமுறை அந்தத் வைரஸ் தொற்று ஏற்படும் போது, அது உடலை பாதிக்காத வண்ணம் நம்மை காக்கிறது.

ஆனால் ஒருசில வைரஸ்களில் இந்த எதிர்ப்புரதம் தன்னை தாக்கிய வைரஸை நினைவில் வைத்துக்கொள்ளாமல் போவதுண்டு. கடந்த காலங்களில் ஏற்பட்ட 4 சாதாரண கொரோனா வைரஸ் வகைகளுக்கும் அதுதான் நடந்தது. அதனால்தான், அவற்றுக்கு எதிராக நம் உடம்பில் நீடித்த எதிர்ப்புசக்தி இல்லாமல் சளி மற்றும் இருமல் தொற்றும் அடிக்கடி ஏற்படுகின்றது.

எனவே, தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக உருவான எதிர்ப்புரதங்கள் (antibodies) வாழ்நாள் முழுவதும் உடலுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்று உறுதியாக கூற முடியாது என மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒரு வருடத்துக்கு எதிர்புரதங்கள் பாதுகாப்பை வழங்கும் என்கிறது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆய்வறிக்கை.

இந்த வைரஸைப் பற்றியும் அதன் எதிர்ப்புத் தன்மை பற்றியும் மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு சில பகுதிகளில் கூறப்படுவதையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். வைரஸின் பரவும் வேகம் குறைந்தாலே இதன் தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்