'ரூபாய்' நோட்டில் இவ்வளவு நேரம் 'வைரஸ்' இருக்குமா? 'முகக்கவசத்தை ஏன் தொடக்கூடாது?...' 'விஞ்ஞானிகளின்' புதிய 'ஆய்வு' முடிவுகள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ், முக கவசங்கள் ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் எத்தனை நாட்கள் வரை உயிர் வாழும் என்பது குறித்து, ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The Lancet) கூறியுள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் லியோ பூன் லிட்மேன், மாலிக் பீரிஸ் என்ற இரு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வு முடிவுகளின் படி, அச்சடித்த காகிதம், ரூபாய் நோட்டுகள், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாக உயிர் வாழும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மரப்பலகை, மற்றும் துணிகளில் 2 நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தாமிரத்தில் 4 மணி நேரத்திற்கும், அட்டைப் பெட்டிகளில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக கிருமிகள் உயிரோடு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

முக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முகவும் முக்கியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் முகக்கவசத்தில் 24 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அவற்றை தொட்டுவிட்டு கண்களைக் கசக்குதல் அல்லது காது, தலைமுடி, உடை போன்றவற்றை தொடுவதற்கு வாய்ப்பிருப்பதால் வைரஸ் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகின்றனர். முகக் கவசங்களை பயன்படுத்தியவுடன் அழித்து விடுவது சிறந்தது என கூறுகின்றனர்.

மளிகை போன்ற பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வரும்போது மக்கள் கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அணிந்திருக்கும் உடை, முகக்கவசம் மற்றும் அட்டைப் பெட்டிகள் போன்றவற்றில் வைரசை கடத்தும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்