'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலேயே முதல்முதலாக ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஹாங்காங்கில் பதிவு செய்யயப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் தற்போது உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு குணமடையும்போது  உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருகிவிடுவதால் மீண்டும் கொரோனா ஏற்படாது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனாலும் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் லேசான பாதிப்பு போன்ற தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், தற்போது உலகிலேயே முதல்முதலாக ஹாங்காங்கில் ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி குணமான நபருக்கு, 4 மாதங்களுக்குப் பின் மீண்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஹாங்காங் நபரிடம் ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனையில், கொரோனா வைரஸ் சற்று மாறுபட்ட வடிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு வாழ்நாள் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகாது எனவும், குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்த அறிகுறியும் இல்லாமால் இருந்த அவருக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒருவருக்கு மட்டுமே இதுபோல மீண்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் யாரும் அச்சமடைய வேண்டாமென உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்