காணாமல் போன மாடல் அழகி.. ஃப்ரிட்ஜில் இருந்த கால்கள்?.. கதிகலங்கி நின்ற போலீஸ்.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹாங்காங் நாட்டை சேர்ந்தவர் அபி சோய். இவர் பிரபல மாடல் அழகியாக இருந்து வந்தார். அது மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் அபி சோய் அதிகம் புகழ் பெற்றவராக இருந்தார்.

காணாமல் போன மாடல் அழகி.. ஃப்ரிட்ஜில் இருந்த கால்கள்?.. கதிகலங்கி நின்ற போலீஸ்.. என்ன நடந்தது?
Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!

அதே போல, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி இருந்தார். அபி சோய்க்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். மேலும் கணவரை பிரிந்து அவர் வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக அபி சோய் திடீரென மாயமாகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, புகாரின் பெயரில் போலீசார் அபி சோயை பல இடங்களில் தேடியும் வந்தனர். ஆனாலும் அபி சோய் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்பாக தாய்போ என்னும் மாவட்டத்தில் அபி சோயின் உடல் பாகங்கள் கிடப்பது பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அபி சோயின் 2 கால்கள் துண்டாக வெட்டப்பட்டு அங்கே உள்ள ஃப்ரிட்ஜில் இருந்த சூழலில், தலை, உடல் மற்றும் கைகளையும் அங்கே போலீசார் தேடி உள்ளனர். ஆனால், எதுவுமே போலீசாருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது.

அபி சோய் மரணம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்ட சூழலில், அவரது கணவர் அலெக்ஸ் தான் குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பின்னர் அவரை தீவிரமாக போலீசார் தேடி வந்த சூழலில், ஆளில்லா விமானம் மற்றும் மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அபி சோயின் கணவரைத் தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே, தன்னை தேடுவது பற்றி அறிந்த அபி சோய் கணவர், வேறொரு தீவிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளதாக கூறப்படும் சூழலில், அவரையும் அவரது குடும்பத்தினர் சிலரையும் போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அபி சோயின் உடல் பாகங்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. அதே போல சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடம்பர ரக வாட்சுகளையும் அபி சோயின் கணவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் சொத்து தகராறின் பெயரில் அபி சோய் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Also Read | "வெறித்தனமான சினிமா ரசிகரா இருப்பாரோ"... 17 வருசமா தியேட்டரில் பார்த்த 470 படங்கள்.. வைரலாகும் குறிப்புகள்..

HONG KONG MODEL, HONG KONG MODEL ABBY CHOI

மற்ற செய்திகள்