கடலில் மூழ்கிய பிரமாண்ட மிதவை ஹோட்டல்.. 50 வருசம் முன்னாடியே இவ்ளோ பணத்த இழைச்சு கட்டிருக்காங்களா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பிரம்மாண்ட மிதக்கும் ஹோட்டல், கடலில் மூழ்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பது பலரையும் சோகமடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!

ஹாங்காங்கின் அடையாளம்

1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த உணவகம் கட்டப்பட்டது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உள்ளிட்டோர் உள்ளிட்ட உலக பிரபலங்கள் வருகை புரிந்துள்ள இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் இருந்து ஹாங்காங் செல்பவர்கள் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த விருப்பப்படுவதுண்டு. உள்ளூர் மக்கள் தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஹோட்டலை கருதி வந்தனர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் கொரோனா காலத்திற்கு பிறகு வீழ்ச்சியை சந்தித்தது.

கொரோனா

சீனாவில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா என்னும் பெருந்தொற்று உலகையே ஸ்தம்பிக்க செய்துவிட்டது. உலகம் முழுமையும் பரவியுள்ள இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் லட்சக்கணக்கில் மக்கள் மாண்டுபோன நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்கள் கொரோனா காரணமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன.

அந்த வகையில் இந்த ஜம்போ மிதவை ஹோட்டலும் கொரோனா காலத்தில் கடும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சம் தொட்ட நிலையில் பல நாடுகள் பயணத்தடைகளை விதித்தன. இதன் காரணமாக உலக அளவில் சுற்றுலாத் துறை பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

நஷ்டம்

உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றிவந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது நிறுவனம். இந்நிலையில், பராமரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் இருந்து வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து தனது பயணத்தை துவங்கியது.

விபத்து

இந்த நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் கடைசியில் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம். சுமார் 50 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த ஜம்போ ஹோட்டல் கடலில் மூழ்கியது பலரையும் சோகமடைய செய்துள்ளது.

Also Read | லண்டனுக்கு செல்லும் இந்திய அணியின் விமானத்தை தவற விட்ட அஸ்வின்.. இது தான் காரணமா? முழு தகவல்

HONG KONG, HONG KONG ICONIC FLOATING RESTAURANT, JUMBO FLOATING RESTAURANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்