₹5 கோடிக்கு சொந்த வீடு இருக்கு.. டெய்லி ₹20 ஆயிரம் வருமானம் வேற.. ஆனாலும் ரோடு தான் வீடு.. பகீர் கிளப்பிய காரணம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமாக வீடு இருந்தபோதிலும் அதனை வாடகைக்கு விட்டுவிட்டு சாலை ஓரங்களில் வசித்து வருகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.
Also Read | யாத்திரை நடுவே பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி.. வீடியோ..!
பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டோம். இவருக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒரு இருக்கிறதாம். இருப்பினும் சாலை ஓரங்களில் வசித்துவரும் இவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டும் வருகிறார். தனது இந்த நிலைக்கு தன்னுடைய போதை பழக்கமே காரணம் என சொல்லியிருக்கிறார் டோம். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருக்கும் இவர், நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்ததாகவும், கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வமுடன் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இளம் வயதில் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் தன்னுடைய வாழ்க்கை தடம் மாறிவிட்டதாக அந்த வீடியோவில் வருத்ததுடன் பேசியிருக்கிறார் டோம். தன்னுடைய வீடுபற்றி பேசிய அவர், தன்னுடைய காதலி கர்ப்பமாக இருந்தபோது அவருடைய தந்தை வீடு ஒன்றை தன்னுடைய பெயருக்கு எழுதி வைத்ததாக சொல்லியிருக்கிறார். தற்போது தனக்கென யாரும் இல்லை என கவலையுடன் தெரிவித்திருக்கும் டோம், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு வருவதாக சொல்லியிருக்கிறார்.
வாடகையாக மாதாமாதம் 1300 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 1.27 லட்ச ரூபாய்) கிடைப்பதாகவும், அப்பணத்தை கொண்டு போதை பொருட்களை வாங்கிவிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ரயில் நிலையங்களில் யாசகம் பெறுவதன் மூலமாக தனக்கு தினசரி 200 முதல் 300 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 - 30 ஆயிரம் ரூபாய்) கிடைப்பதாகவும் அதனைக்கொண்டு உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு செலவு செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
டோம், தன்னுடைய போதை பழக்கத்தில் இருந்து விடுபட மறுவாழ்வு மையத்திற்கு சென்று கொஞ்சகாலம் தங்கி இருந்ததாகவும் அதன் பலனாக 7 ஆண்டுகள் தான் மனம் திருந்தி வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பின்னர் மீண்டும் போதை பொருட்களை பயன்படுத்த துவங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு இந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு சராசரி வாழ்க்கை வாழவே விருப்பம் எனவும்உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி மக்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள்,"நல்ல துணையை தேடிக்கொண்டு புது வாழ்க்கையை துவங்குங்கள்" எனவும் "உங்களால் இதிலிருந்து விடுபட முடியும் என முதலில் நம்புங்கள்" எனவும் டோமிற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த மனசுதான் சார்.!! தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து நெகிழ வச்ச நபர்..!
- "கட்டிடம் இடிஞ்சு விழப்போகுது.. தப்பிச்சிடுங்க".. அதிகாலையில் கடவுள் மாதிரி வந்து அலெர்ட் கொடுத்த நபர்.. கொஞ்ச நேரத்துல நடந்த பயங்கரம்..
- 18 வருஷமா விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நபர்.. டெர்மினல் படம் உருவாக காரணமே இவர்தானா ?.. ஆச்சர்யத்துக்கு பின்னால் இருக்கும் சோகம்..!
- 10 வயசுலயே குடும்பத்த பிரிஞ்ச 'சிறுவன்'.. பல மாசம் கழிச்சு நடந்த 'சம்பவம்'.. "பாக்குறப்போ கண்ணீரே வந்துடுச்சு"..
- "இனிமே குழந்தை பெத்துக்க முடியாது??".. ஏங்கிய பெண்.. கருவை சுமந்த தோழி.. மனம் உருக வைத்த பின்னணி!!
- 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓவியம்.. கோபத்துல 2 பெண்கள் செஞ்ச காரியம்.. அப்படியே அதிர்ந்து போய் நின்ன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
- 19 வயதில்.. 3.7 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண்.. பல பேருக்கு இன்ஸபிரேஷனாக இருக்கும் இளம்பெண்ணின் ஸ்டோரி!!
- "இந்த ஒத்த Building தான் மொத்த ஊரா??".. 14 மாடி கொண்ட கட்டிடம்.. அதிசய ஊரை பாத்து ஆடிக் கிடக்கும் நெட்டிசன்கள்!!
- "கார் காணாம போனது லண்டன்'ல.. கெடச்சது பாகிஸ்தான்'ல.." உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!.. எப்படி நடந்தது??
- 431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"