'வீடு இல்லாம அம்மா கூட தெருவில் நின்னேன்'...'சில சமயம் 'பப்ளிக் டாய்லெட்' தான் வீடு'... 'இன்று கையில் லம்பார்கினி கார்'... 25 வயது இளைஞரின் வெற்றி ரகசியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாம் சில சமயம் சந்திக்கும் அவமானங்களும், நிராகரிப்பும் தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். அப்படி வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்த இளைஞர் இன்று பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் Branden Condy. 25 வயது இளைஞரான இவர் சிறு வயது முதலே வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, அதனுடன் போராடி வந்துள்ளார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த Branden, தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் Branden தாய் பார்த்து வந்த வேலையும் பறிபோன நிலையில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து  துரத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் இருவரும் சாலையிலேயே வசித்து வந்துள்ளார்கள். தற்போது Instagram Marketing Agency மற்றும் வேறு சில தொழில்கள் மூலமாக  Branden இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டும் மாதத்திற்கு 25 ஆயிரம் டாலர் சம்பாதிக்கும் Branden, சிறு வயது முதலே தான் சம்பாதித்த பணத்தைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ''எங்களுக்கு வீடு இல்லாத நேரத்தில் நண்பர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்குமா என அலைந்துள்ளேன். சில நேரங்களில் பப்ளிக் டாய்லெட்டில் கூட தங்கியிருக்கிறேன். ஆனால் நான் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். எந்த சூழ்நிலையிலிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்'' என Branden உறுதியோடு கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்