இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டி மீது போர்த்தப்பட்ட வித்தியாசமான கொடி.. அதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா..?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதில் ராணியின் சவப்பெட்டி மீது வித்தியாசமான கொடி ஒன்று போர்த்தப்பட்டுள்ளது. இதற்கென பல முக்கியத்தும் இருக்கிறது.
பிரிட்டன் ராணி
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்படும் உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கொடி
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு அவருடைய சவப்பட்டியில் வித்தியாசமான கொடி போர்த்தப்பட்டுள்ளது. இந்த கொடியை ராயல் ஸ்டாண்டார்ட் என்று அழைக்கிறார்கள். அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடி இருக்கிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமான முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை. ராணியின் சவப்பெட்டியில் போர்த்தப்பட்டுள்ள இந்த கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களுடன் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் நான்காம் பகுதி இங்கிலாந்தையும், இரண்டாவது ஸ்காட்லாந்த்தையும் மூன்றாவது அயர்லாந்தையும் குறிக்கிறது. இந்த கொடி வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றுதான். அரண்மனையில் ராணி இருந்தால் அதன் விதானத்தில் இந்த கொடி பறக்கும். ராணி அரண்மனையில் இல்லையென்றால் கொடி இறக்கப்படும். அதேபோல, ராணி பயணிக்கும் வாகனங்களிலும் இந்த கொடி இடம்பெறும். ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த கொடி அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்படும்.
யார்க்ஷைர் நகரத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த கொடியை உருவாக்கியுள்ளது. 12 அடி உயரமும் 6 அடி அகலமும் இந்த கொடியை கடந்த ஆண்டு மூன்று கலைஞர்கள் இணைந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ராணி எலிசபெத் உயில் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!
- ராணி எலிசபெத்துக்காக.. 30 வருஷம் முன்னாடியே தயாரான சவப்பெட்டி.. "அதுக்குள்ள இத்தன விஷயம் வேற இருக்கா?"
- Queen Elizabeth: "ராணி எலிசபெத் சென்னை வந்துட்டாங்க.. விருந்து ரெடி.. திடீர்னு போனில் வந்த உலுக்கும் செய்தி.. அப்பவும் செஃப் செய்த நெகிழ்ச்சி காரியம்.. CWC வெங்கடேஷ் பட் ஷேரிங்ஸ்!!
- ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"
- ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??
- "அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!
- Queen Elizabeth : 91 வருஷமா விரும்பி சாப்பிட்டது பன்பட்டர் ஜாம் தானா..? ராணி எலிசபெத்தின் டயட் சீக்ரெட் உடைத்த அரண்மனை செஃப்
- 96 வயதில் இங்கிலாந்து எலிசபெத் ராணி மரணம்!.. இரங்கல் தெரிவிக்கும் உலக நாடுகள்!!
- ராணி எலிசபெத் உடல்நிலை பற்றி வெளியான தகவல்.. அரண்மனைக்கு விரையும் உறவினர்கள்!
- ரொம்ப வருஷமா பாட்டி வீட்டுல இருந்த தேசிய கொடி.. எதேச்சயாக போட்டோ எடுத்து பகிர்ந்த குடும்பத்தினர்.. அப்பறம் தான் உண்மை தெரியவந்திருக்கு..!