"வருசத்துக்கு இப்ப 20 மில்லியன் ஆளுங்க வராங்க, ஆனா ஒரு காலத்துல.." மர்மங்கள் சூழ்ந்த மரணத்தீவு.. நடுங்க வைக்கும் வரலாறு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிங்கப்பூர் நாட்டின் 74 ஆவது தேசிய நினைவு சின்னமாக சிலோசோ கோட்டை பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த கோட்டையின் வரலாறு குறித்த செய்தி, இணையத்தில் வைரலாகி பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 19 வயது வித்தியாசம்.. காதலிச்சு திருமணம் செஞ்ச 'ஜோடி'.. பொண்ணோட அம்மா'வ பாத்ததும் மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!

சிங்கப்பூரின் செண்டோசா தீவில் அமைந்துள்ளது சிலோசோ கோட்டை. கடந்த 1878 ஆம் ஆண்டு, தீவின் கடற்கரையை தற்காத்து கொள்ள இந்த கோட்டை கட்டப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, 1942-ல் ஜப்பானிய படைகளை முறியடிக்க, பிரிட்டிஷ் படையினர் இந்த கோட்டையை பயன்டுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், சிலோசோ கோட்டையில் இருந்து சென்ற புல்லட்டுகள், அதனை சுற்றியுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1960 களில், இந்தோனேசிய  ராணுவ படைகளைத் தடுக்க, குர்கா படையினர், சிலோசோ கோட்டையை காவல் காத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சிலோசோ கோட்டைக்கு இருப்பது போன்ற ஒரு வரலாறு சற்று மர்மத்துடன் கூடிய வகையில், அது அமைந்துள்ள செண்டோசா தீவுக்கும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தீவுக்கு 'மரணத்தீவு' என்ற பெயரும் இருந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. கொள்ளைக் கூட்டம், உலக போர் என இந்த தீவு ஒரு மர்மம் நிறைந்ததாகவே இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது, வருடம் தோறும் சுமார் 20 மில்லியன் சுற்றுலாவாசிகள் செண்டோசா தீவு மற்றும் சிலோசோ கோட்டைக்கு வந்து செல்லும் நிலையில், ஒரு காலத்தில் யாருமே இல்லாத மர்மம் நிறைந்த தீவாக தான் இருந்துள்ளது. சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த தீவில், கடல் கொள்ளையர்கள் யாருக்கும் தெரியாமல் இங்கே மறைந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், போரில் மரணமடைந்த வீரர்களை மொத்தமாக இந்த தீவில் புதைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, 18 ஆம் நூற்றாண்டில், இந்த தீவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான தகவல், இன்னும் பலரை கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி உள்ளது.

செண்டோசா தீவில், 18 ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்து வந்த மக்கள் கூட்டத்தில், பாதிக்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் பின்னர், ஜப்பானுக்கு எதிராக செயல்பட்ட சிங்கப்பூர் மற்றும் சீனர்களை கொன்று குவிக்கும் இடமாகவும் ஒரு காலத்தில் செண்டோசா தீவு இருந்ததாக கூறப்படுகிறது.

இப்படி நூறு ஆண்டுகளுக்கும் மேல், ஏராளமான மர்மம் மற்றும் துயரம் சூழ்ந்த இந்த சிலோசோ கோட்டை மற்றும் செண்டோசா தீவின் கதை, 1970-க்கு பிறகு, அப்படியே தலை கீழாக மாறி இருந்தது. மேலும், தற்போது சிங்கப்பூர் சுற்றுலாவின் மையமாகவும் இது உள்ளது. இப்பகுதியில் நிறைய நட்சத்திர ஹோட்டல்களும், கோல்ப் மைதாங்கள் மற்றும் ஸ்டூடியோவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இங்கே ஒரு வில்லாவின் விலை 37 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 294 கோடி ரூபாய்) வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read | "2022'ல இப்டி எல்லாம் நடக்கும்.." துல்லியமா கணிச்ச இளம்பெண்??.. "இப்ப அதையே ஒரு பிசினஸா மாத்திட்டாங்களாம்.."

ISLAND, SENTOSA ISLAND, SILOSO BEACH, SINGAPORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்