"எனக்கு பெருமையா தான் இருக்கு.!".. தமது அங்கங்கள் குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனம்..! முன்னாள் இலங்கை எம்.பி அதிரடி பதில்..
முகப்பு > செய்திகள் > உலகம்தனது மேல் அங்கங்கள் குறித்து அதிக விமர்சன கருத்துக்கள் உருவான நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, கொழும்புவிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார். பிரதமர் வீட்டிற்கு செல்ல முடியாத வகையில், போலீசார் பாதுகாப்பு வேலிகளையும் அமைத்திருந்தனர்.
மேல் அங்கங்கள் பற்றிய கருத்து
அப்போது இந்த தடையை மீறி, ஹிருணிகா மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் உள்ளே செல்ல முயன்றதால்.ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் ஹிருணிகாவின் மேல் அங்கங்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
"கிண்டல் பண்ண எல்லாரும்.."
இது தொடர்பான பதிவுகளை கவனித்த ஹிருணிகா, மிகவும் வெளிப்படையாக, ஒரு பதிலடி கருத்தினை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "எனது மேல் அங்கங்கள் குறித்து நான் பெருமை அடைகிறேன். மூன்று அழகிய குழந்தைகளுக்கு இதன் மூலம் தாய்ப்பால் கொடுத்தேன். அவர்களை நான் வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, எனது முழு உடலையும் அவர்களுக்காக அர்பணித்துள்ளேன். போலீசாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எனது மேல் அங்கங்களை கிண்டல் செய்த நபர்கள் அனைவரும் நிச்சயம் தங்களின் சிறு வயதில், அவர்களின் தாயின் மேல் அங்கத்தில் இருந்து தாய்ப்பால் அருந்தியவர்களாகவே இருப்பார்கள் என உறுதியாக நான் நம்புகிறேன்.
எனது மேல் அங்கங்கள் குறித்து நீங்கள் பேசி, மீம்ஸ் உருவாக்கி நீங்கள் சிரிக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் குடிமகன் இறந்திருப்பான் என்பது உங்களுக்கு தெரிய வரும்" என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
மேல் அங்கங்கள் குறித்து தவறான கருத்துக்கள் உருவான நிலையில், ஹிருணிகா பிரேமச்சந்திர கொடுத்துள்ள பதிலடி பற்றி, நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்