அதிபர் தேர்தலில் 'அதிரடியாக' களமிறங்கும் பிரபல 'ராப் பாடகர்' - "வெள்ளை மாளிகையில் 'வெஸ்ட்'?" - அதிர்ச்சியில் 'டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பிரபல நடிகை கிம் கர்தர்ஷியனின் கணவரும் பிரபல ஹிப் ஹாப் பாடகருமான கென்யா வெஸ்ட் அமெரிக்க தேர்தலில் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதிவு ஒன்றை கென்யா வெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும், இதனால் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் திட்டமிட்டு இருப்பதாகவும் கென்யா வெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக அதிக வன்முறை நடந்து வரும் நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவரை எதிர்த்து ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பரவலான கருத்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நண்பேன்டா!’ - வாழ்த்து சொல்லிய 'மோடி'... தெறிக்க விட்ட 'டிரம்ப்'!
- 'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
- டிரம்ப்புக்கு 'செக்: ”நான் அதிபரானால், H-1B விசா தடையை நீக்குவேன்” - ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ‘ஜோ பிடன்’ அதிரடி!
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நாடு!
- 'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது!? நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்!'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்!
- 'டிரம்ப்' மனைவி 'மெலனியா...' 'ஹெச்-1பி' விசாவில் 'அமெரிக்கா வந்தவர்தான்...' 'ஓ...' 'இப்படி ஒரு கதை இருக்கா...'
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- "டிரம்ப்பின் H-1B விசா முடிவு!".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்?
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- இன்னும் கொஞ்ச நாளுல தெரியும்... 'டிரம்ப்' எடுக்கும் அடுத்த 'மூவ்'... 3 லட்சம் இந்திய 'ஐ.டி' ஊழியர்கள் நெலம 'கஷ்டம்' தான்?!