'பூமியை நெருங்கும் சூரிய புயல்'... 'ஜி.பி.எஸ், செல்போன் சேவை பாதிக்கப்படுமா'?... விண்வெளி ஆய்வாளர்கள் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் புயலானது சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் சுழன்று அடிப்பதாக நாசா கூறியுள்ளது.
சூரியனின் கரும்புள்ளிகள் பரப்பில் அதிக கதிர்வீச்சு கொண்ட புயல் உருவாகியிருப்பதாகவும், அவை பூமியை நோக்கி வருவதாகவும் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் சக்திவாய்ந்த கதிர்வீச்சுப் புயல் இன்று பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுவதால், செல்போன் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கரும்புள்ளிகள் என்பது கருப்பு நிறத்தில் இருப்பவை அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் கரும்புள்ளிகள் பரப்பில் வெப்பம் சற்று குறைவாக இருக்கும். அந்த இடத்தில் தற்போது உருவாகியிருக்கும் புயலானது மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவை அதிகபட்சம் இன்று பூமியின் காந்தப் புலத்தைத் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பில் இருக்கும் காந்தப்புலம், மிக வலுவாக இருப்பதால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படாது என்றும், ஒரு வேளை கதிர்வீச்சின் தன்மை அதிகமாக இருந்தால் பூமியின் மேற்புறத்தில் இருக்கும் செயற்கோள்களை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால், ஜி.பி.எஸ், செல்போன் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்த நிலைகளில் சூரிய'ப் புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளனர். அதேநேரத்தில் சூரியப் புயல் ஏற்படுத்தும் சேதம் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்