"ஆத்தாடி, ஒரு லிட்டர் தேள் விஷம் இம்புட்டு கோடியா?".. வியக்க வைக்கும் மவுசு.. 'பின்னணி' என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகில், நம்மைச் சுற்றி ஏராளமான விஷத் தன்மை கொண்ட உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி.. "அப்படி என்னங்க பண்ணாங்க??"

அதில், தேளும் ஒருவித விஷத் தன்மை கொண்ட உயிரினம் எனப்படும் நிலையில், ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை தொடர்பான செய்தி, பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

பல தேள்கள் நம்மை கடிக்கும் போது உயிருக்கு ஆபத்து நேராது என்ற போதிலும், அதன் காரணமாக உருவாகும் வலி என்பது சற்று அதிகமாக தான் இருக்கும்.

எந்த ஒரு கால நிலையிலும் வாழக் கூடிய உயிரினமான தேளின் விஷம், உலகளவில் மிகவும் விலை உயர்ந்த விஷமாகவும் கருதப்படுகிறது. அப்படி என்ன தான் தேளின் விஷத்தில் உள்ளது என்பது பலரது மத்தியில் கேள்வியை உண்டு பண்ணலாம். இதற்கான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

தேளின் விஷத்தில் இருந்து மருந்துகள் நிறைய தயார் செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல், தேளின் விஷத்திற்கு நமது நோய்கள் சிலவற்றை குணப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக தான், தேளின் விஷத்திற்கு அதிக டிமாண்ட் உள்ளது. தற்போது ஒரு கிராம் தேளின் விஷம் என்பது, இந்திய மதிப்பில் 80,000 ரூபாய் வரை விற்பனை செயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி பார்க்கையில், ஒரு லிட்டர் தேளின் விஷம் என்பது, 80 கோடி ரூபாய் மதிப்பு உடையதாகும்.

தங்கத்தை விட அதிக மதிப்புள்ள இந்த தேளின் விஷத்தை சேகரிப்பதற்காக, துருக்கி நாட்டில் தேள்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் 20,000 தேள்கள் வரி ஆய்வகம் ஒன்றில் வளர்த்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதனை சிறந்த முறையில் பராமரித்தும் வருகின்றனர்.

ஒரு நாளைக்கு தேள்களிடம் இருந்து, 2 கிராம் விஷத்தை சேகரிக்கும் அவர்கள், இதற்காக சில சிறப்பு முறைகளையும் கையாண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2 மில்லி கிராம் தான் ஒரு தேளிடம் இருந்து எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 1 கிராம் வரை, 300 முதல் 400 தேள்களிடம் இருந்து சேகரிக்கின்றனர்.

அப்படி எடுக்கப்படும் விஷத்தினை உறைய வைத்து, பின்னர் அதனை பொடியாக்கி விற்பனை செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, மூட்டு வலியை எந்தவித பக்க விளைவும் இல்லாமல் தேள் விஷம் குறைக்கும் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக, தேளின் விஷம் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு லிட்டர் தேளின் விஷம், 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்) வரை விற்கப்படும் விஷயம், பலரையும்  ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

Also Read | 30 நிமிஷம்.. கடற்கரை வெயிலில் தூங்கிய பெண்.. "எந்திரிச்சு கண்ணாடி'ல மூஞ்ச பாத்ததுக்கு அப்புறம்".. ஒரு கணம் அப்படியே ஆடி போய்ட்டாங்க

SCORPION, SCORPION VENOM, HIGH DEMAND FOR SCORPION VENOM

மற்ற செய்திகள்