வரலாறு காணாத 'வறட்சி'.. தண்ணி வற்றியதும் வெளியே தெரிஞ்ச உண்மை.. "உள்ளூர் ஆளுங்க பார்த்து மிரண்டு போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐரோப்ப நாடுகளில் தற்போது வெப்ப நிலை கடுமையாக வாட்டி வரும் நிலையில், நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்ததால், தற்போது வெளியே தெரிந்த விஷயம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச ரூ.10 லட்சத்த எடுத்து ஊருக்கு ரோடு போட்ட தமிழ்நாடு ஐடி ஊழியர்.!

ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மேலும், பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், Wales பகுதியை அடுத்த Vyrnwy என்னும் இடத்தில் அமைந்துள்ள Beautiful Lake என்ற நீர் நிலை வறண்டு போயுள்ளது. இதனால், அந்த ஏரியில் உள்ள நீரில் மூழ்கி போன Llanwddyn என்ற கிராமம், தற்போது நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போன பிறகு, வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

கடந்த 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது, இந்த நீரில் தொலைந்த கிராமம் வெளியே தெரிந்திருந்தது. அதன் பின்னர் தற்போது அதனை விட அதிக வறட்சி, ஐரோப்பா நாடுகளில் உருவாகி உள்ளதால், 46 ஆண்டுகள் கழித்து இந்த எரியான Vyrnwy அடியில் இருந்த கிராமம் தற்போது தென்பட்டுள்ளது.

எப்போதும், 90 சதவீதம் நீர் நிரம்பி இருக்கும் நிலையில், தற்போது உண்டான வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இந்த கிராமம் தென்பட ஆரம்பித்துள்ளது. பழைய கட்டிடங்கள், நீரில் மூழ்கிய வீடுகளின் அடித்தளங்கள், கல் சுவர்கள் மற்றும் பழைய பாலம் உட்பட மறைக்கப்பட்ட கிராமத்தின் விவரங்களைக் கண்டு மக்கள் அனைவரும் வியந்து போயுள்ளனர்.

முன்னதாக, கடந்த 1880 ஆம் ஆண்டின் போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்களை வெளியேற்றி, அப்பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி, லிவர்பூல் பகுதி மக்களுக்கு நீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இங்கிருந்த வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஏரி மற்றும் அணைகள் அங்கே கட்டப்பட்டதால், இந்த வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி போயின.

ஆனாலும், வரலாற்று சிறப்புமிக்க இந்த கிராமத்தின் பகுதிகள், இது போல அதிக வெப்பநிலை உருவாகும் போது தென்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 1881 ஆம் ஆண்டு இந்த அணை மற்றும் நீர்த் தேக்கத்தின் பணிகள் தொடங்கியதையடுத்து, 1888 ஆம் ஆண்டு இந்த ஏரி திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் இருந்த மக்கள், வேறு பகுதிக்கு போனதால், அங்கிருந்த ஒரு சமூகமே மங்கிப் போனதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் வெப்பநிலை மாறினால், நீருக்கு அடியில் இருந்த கிராமம் மறைந்து விடும் என்பதால், அப்பகுதி மக்கள் இதனை தற்போது மிகவும் ஆர்வத்துடன் கண்டு புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

Also Read | எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ஏலத்துக்கு விடும் 'கல்லூரி' காதலி.. "பிறந்தநாளுக்கு அவரு எழுதுன கடிதம் தான் ஹைலைட்டே"

HIDDEN UNDERWATER, VILLAGE, வறட்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்