உயிரிழந்தோரின் சடலங்களை குளிப்பாட்டி வந்த 22 வயது இளம்பெண் மரணம்.! "பழகியவர்களின் உடலை கழுவும்போது அவளுக்கு.." - மனம் வெதும்பிய பெற்றோர்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் - ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டும் வேலையை தொடர்ந்து செய்து வந்தவர் 22 வயது ஆன  Taylor Watterson.

Advertising
>
Advertising

Also Read | "16 வயது முஸ்லீம் பெண்ணின் திருமண விவகாரம்.!" - பரபரப்பில் ஆழ்த்திய உயர்நீதிமன்ற உத்தரவு!

ஆனால் இந்த இளம்பெண் திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி தம்முடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அவருடைய பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இறந்தது பற்றி இப்போது அவருடைய பெற்றோர் மனம் திறந்துள்ளனர். 

பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டுவதற்கு என்று தனி ஆட்களை பணியில் அமர்த்த கூடிய போக்கு ஸ்காட்லாந்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் உயிரிழந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டக் கூடிய பணியைதான், 22 வயதான Taylor Watterson செய்து வந்திருந்தார். இந்நிலையில் அவருடைய திடீர் மறைவு குறித்து அவருடைய பெற்றோர் மனம் திறந்துள்ளனர்.

அதில், “Taylor Watterson பணிபுரியும் அந்த காப்பகத்தில் வாழ்பவர்கள் இறந்த பின்னர், பணி நிமித்தமாக அவர்களின் உடல்களை குளிப்பாட்ட வேண்டிய பணியையும் சேர்த்து அந்த இளம் பெண் தொடர்ந்து செய்துவந்ததார். அவர் இப்படி செய்து வந்ததால் அது அவருடைய மன ஆரோக்கியத்தை அது கண்டிப்பாக பாதித்திருக்கும் என்று நம்புகிறோம்..

அத்துடன் கொரோனா சூழ்நிலையில் அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்போது கூட, தாம் ஏற்கனவே அன்பாக பழகியவர்களின் உடலை குளிப்பாட்டியது Taylor Watterson -க்கு மேலும் கஷ்டமாக இருந்திருக்கும். முன்னதாக நான் எத்தனை சடலங்களை தினமும் குளிப்பாட்டுகிறேன் தெரியுமா.? என்று வந்து பேசிக்கொண்டு இருப்பாள்.. எதையும் வெளியே சொல்லாமல் மனதுக்குள் போட்டு வைத்துக்கொண்டு புழுங்குவாள். அவளுடைய தரப்பு தகவல்கள் பலவும் எங்களுக்கு தெரியாமலே இருந்தது!” என்று சொன்ன Taylor Watterson-ன் பெற்றோர்கள் தற்போது நினைவுகூர்ந்து பேசியுள்ளதை அடுத்து, பலருக்கும் இந்த பெண்ணைப்பற்றி இப்போது தெரியவந்திருக்கிறது.

Also Read | உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்.. ‘மீண்டும் உயிர் பெறலாம்’ என மூட நம்பிக்கையா.?

TAYLOR WATTERSON

மற்ற செய்திகள்