மாரடைப்பால் ‘நின்றுபோன’ இளம்பெண்ணின் இதயம்.. ‘6 மணி நேரம்’ கழித்து துடித்த ‘அதிசயம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மாரடைப்பால் இதயம் நின்ற பிறகு 6 மணி நேரம் கழித்து இளம்பெண் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த ஆட்ரே மாஷ் (34) என்ற பெண் தன் கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, அதீத பனி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து ஆட்ரேயின் கணவர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், 6 மணி நேரம் கழித்து அவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஆட்ரேயின் மருத்துவர், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால் உடலில் காணப்பட்ட தாழ் வெப்பநிலை, அது அவரது மூளையைத் தாக்காமல் பாதுகாத்துள்ளது. அதனாலேயே அவர் 6 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

அதீத குளிரால் மாரடைப்பு ஏற்பட்ட ஆட்ரே, அதே அதீத குளிரால் தான் உயிர் பிழைக்கவும் முடிந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சர்வதேச அளவில் எப்படியென தெரியவில்லை, ஆனால் ஸ்பெயினில் ஒருவர் 6 மணி நேரம் இதயத்துடிப்பின்றி இருந்து பின் உயிர் பிழைத்துள்ளது இதுவே முதல்முறை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

HEART, WOMAN, MIRACLE, CARDIACARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்