கொரோனாவால யாரெல்லாம் 'இறப்பாங்க'ன்னு... 'அது' சரியா கணிச்சு காட்டிடும்...! புதிய ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றினால் யாரெல்லாம் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும். வலது இதய அறைகள் விரிவடைந்து இருந்தால் கொரோனா நோயாளிகள் மரணிக்க கிட்டத்தட்ட நான்கு மடங்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் மற்றும் நுரையீரலை நேரடியாக தாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய அறை மூலம் கொரோனாவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் ஒன்றால் தொற்று நோயால் யார் இறப்பார்கள் என்று கணிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் மவுண்ட் சினாய் பல்கலைக்கழக இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வாளர்கள் 110 கொரோனா வைரஸ் நோயாளிகளின் நிலைமைகளையும் அவர்களின் முந்தைய மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அவர்களின் ஈகேஜி எனப்படும் எக்கோ கார்டியோகிராபியை ஆய்வு செய்தனர்.
31 சதவீத நோயாளிகளுக்கு 'வலது வென்ட்ரிகுலர் டைலேஷன்' இருப்பதை ஈகேஜி வெளிப்படுத்தியது, அதாவது ஒவ்வொரு இதயத்தின் கீழ் வலது அறை இயல்பை விட பெரியதாக உள்ளது. அதில் விரிவாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள்(கொண்ட 41 சதவீத நோயாளிகள் இறந்தனர். இதய அறைகளில் மாற்றங்கள் இல்லாதவர்கள் பதினொன்று சதவீதம் தான் மரணம் அடைந்து உள்ளனர்.
பெரிதாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள் நோயாளிகளில் கிட்டத்தட்ட 62 சதவிகிதம் - ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை நுரையீரலுக்கு செலுத்தும் இதயத்தின் அறை உள்ளவர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 19 சதவீதம் இதய பிரச்சினைகள் இருப்பதாக சீனாவின் ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன, நோயாளிகளின் இதயங்கள் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதற்கான அறிகுறிகளை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே!'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை!.. நீதிமன்றம் அதிரடி!
- 'டிரம்ப் உயிரோடு அவரே விளையாடுறாரு'... 'அந்த மாத்திரையை சாப்பிடுறது நல்லதுக்கு இல்ல'... கிளம்பியிருக்கும் பரபரப்பு!
- 'வெள்ளியில் மாஸ்க்...' 'கல்யாண ஜோடின்னா கூட்டத்துல தனியா தெரியணும்ல...' இந்த மாஸ்க்கோட விலை என்ன தெரியுமா...?
- 'குவாரண்டைன்' மையத்தில் வெளிப் பெண்கள் அழைத்துவரப்பட்டு 'குத்தாட்டம்!'.. 'நடவடிக்கை பாய்வதோடு', அதிகாரி அளித்த 'மாற்று' சலுகை!
- கொரோனா 'பரவலை' குறைப்பதில்... அமெரிக்கா, இத்தாலி நாடுகளை விட... 'இந்த' நாடு தான் ரொம்ப 'பெஸ்ட்'டாம்!
- "உங்களுக்கு 30 நாள் டைம் தரேன்!".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்!.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்!.. என்ன நடந்தது?
- தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா!.. நாள்தோறும் உச்சம் தொடும் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்!.. வதந்தியால் வந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- ஆகஸ்ட் 3-ம் தேதி 'பள்ளிகள்' மீண்டும் திறக்கப்படும்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- 'இந்த மருந்தை வெறும் வயித்துல...' '3 நாள் சாப்பிட்டா போதும்...' 'கொரோனா வராது...' 'நாங்க இத யூஸ் பண்றோம்...' தமிழக அரசு அறிவிப்பு...!