"ஒவ்வொரு மார்ச் 17 ஆம் தேதியும் இப்படி நடக்குது"..1000 வருஷமா நீடிக்கும் மர்மம்.. நடுங்கும் Pub ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் இருக்கும் பழமையான Pub ஒன்று 1000 வருட மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் இன்றும் திணறி வருகிறது.

Advertising
>
Advertising

பழமையான Pub

கிழக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் இருக்கிறது Old Ferry Boat Inn என்னும் பழமையான Pub. இங்கே ஒவ்வொரு வருடமும் மார்ச் 17 ஆம் தேதி இங்குவரும் பயணிகளுக்கு பல திடுக்கிடும் அனுபவங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர் இந்த Pub நிர்வாகிகள். அந்த நாளில், வித்தியாசமான உருவங்கள் தோன்றுவதாகவும், விளக்குகள் அச்சம்கொள்ளும் வகையில் ஒளிர்ந்து  பின்னர் அணைந்துப்போவதாகவும் சொல்லும் இதன் பணியாளர்கள் இதற்கு காரணம் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் தான் என்கிறார்கள்.

1000 வருடத்திற்கு முன்பு

தற்போது Pub  இருக்கும் இந்தப் பகுதியில் 1050 ஆம் ஆண்டில் ஜூலியட் டெவ்ஸ்லி எனும் இளம்பெண் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர், டாம் சூல் என்பவரை காதலித்து வந்ததாகவும் கூறும் இந்த Pub நிர்வாக அதிகாரிகள், சரியான நேரத்தில் டாம் வராத காரணத்தினால் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக சொல்கின்றனர். ஜூலியட்டின் உடல் இந்த கட்டிடத்தின் உள்ளேயே புதைக்கப்பட்டிருக்கிறது. இன்றும், அந்த இடத்தின் மீது கருப்பு நிற கல்லை பதித்து, அதன்மீது யார் காலும் படாமல் பார்த்துக்கொள்கின்றனர் பப் அதிகாரிகள்.

அப்படி ஜூலியட் மரணித்த தேதி 1050 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆகும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அதே தேதியில் ஜூலியட் இந்த பப்பிற்கு வருவதாக நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள்.

திகில் அனுபவம்

இதுகுறித்து பேசிய இந்த பப்பின் முன்னாள் ஊழியர் ஜேமி டாம்ஸ்," அங்கே பல திகிலூட்டும் அனுபவம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. மார்ச் 17 ஆம் தேதி கட்டிடத்தில் உள்ள விளக்குகள் வழக்கத்திற்கு மாறாக பிரகாசமாகவோ அணைந்துபோவது போன்றோ எரியும். விளக்குகளை ஆஃப்  செய்தாலும் அவை ஒளிர்ந்துகொண்டே இருக்கும். 'குட்நைட் ஜூலியட்' என்று சொன்னால் மட்டுமே அவை அணையும். அறைகளில் கதவுகள் தாமாகவே காற்றில் ஆடுவது போல சத்தம் எழும்பும். இதனால் பல விருந்தினர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்" என்றார்.

1000 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள Old Ferry Boat Inn எனும் விடுதியில் ஒவ்வொரு மார்ச் 17 ஆம் தேதியும் வழக்கத்திற்கு மாறாக சம்பவங்கள் நடைபெறுவது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இன்றும் இருந்துவருகிறது.

HAUNTEDPUB, ENGLAND, JULIET, இங்கிலாந்து, மர்மஇடம், விடுதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்