“இதுவரைக்கும் நிறைய பேருக்கு வேலை பறி போயிருக்கலாம்.. ஆனா இனிமேதான் பேரழிவு காத்திருக்கு!”.. கனத்த இதயத்துடன் பிரிட்டன் அதிகாரி!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் ஏராளமானவர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், மேலும் பலர் வேலையிழக்கும் ஒரு பேரழிவை பிரிட்டன் சந்திக்கவிருப்பதாக சேலன்ஸர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கடந்த ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் பிரிட்டன் பொருளாதாரம் 20.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் வரலாற்றில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக பொருளாதார மந்த நிலையை அடைந்து விட்டது என்பது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பல்லாயிரக்கணக்கான ஏற்கனவே வேலையை இழந்துவரும் நிலையில் வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழக்கும் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக சான்சலர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரடுமுரடான பாதையில் பிரிட்டன் பயணிப்பதாகவும், எதிர்காலத்தில் மிகப் பெரிய முதலீடுகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த எளிய சோதனை போதும்'... 'கொரோனாவால் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிய'... 'ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு!'...
- 'ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5...' உண்மையாகவே கண்டு பிடிச்சிட்டாங்களா...? - விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகங்கள்...!
- 'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'...
- கொரோனா ரொம்ப வேகமா 'பரவுறதுக்கு' இதுவும் ஒரு முக்கிய காரணம்... ஐ.நா எச்சரிக்கை!
- 'வேலை தரோம்னு SMS வரும், நம்பிடாதீங்க...' 'முறையான ப்ராசஸ் இது தான்...' - எச்சரிக்கும் இந்தியா போஸ்ட்...!
- சேலத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா!.. மதுரையில் தொற்று குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- அடக்கடவுளே! 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு!
- செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?
- தமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவுக்கு பலி!.. தீவிர பரிசோதனையில் சென்னை?.. முழு விவரம் உள்ளே
- “காப்பாத்துங்க!!”.. நோயாளி உள்ளே சென்றதும் டாக்டரிடம் இருந்து வந்த மரண ஓலம்.. எட்டிப்பார்த்தவர்களின் ஈரக்குலை நடுங்கிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!