'கண் இமைக்கும் நேரத்தில்'... 'இடிந்து விழுந்த பிரமாண்ட ஹோட்டல்'... 'பதறவைக்கும் காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரமாண்ட ஹோட்டல் ஒன்றின், வெளிப்புற சுவர் இடிந்து விழுந்து நடந்த கோர காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில், கேனல் மற்றும் வடக்கு ராம்பார்ட் தெருவில், ‘ஹார்ட் ராக்’ என்ற பிரமாண்ட ஹோட்டலின் கட்டுமானப்பணிகள் நடைப்பெற்று வந்தன. 350 அறைகள் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரத்தின்படி காலை 9.12 மணியளவில், அந்த ஹோட்டலின், வெளிப்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கிரேன் சரிந்து விழுந்தது. நீண்ட உயரத்தில் கட்டப்பட்டுவந்த ஹோட்டலின் சுவர் இடிந்து விழுந்ததில், அப்பகுதி முழுவதும் புகையும், புழுதியும் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளர் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி  நடைப்பெற்று வருகிறது. இந்த விபத்தில் மொத்தம் 18 பேர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த 3 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே சுவர் இடிந்து விழுந்த பகுதியில் கட்டிடப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த 270 அடி ராட்சத கிரேன் இருப்பதால், அது எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

VIDEO, AMERICA, HARDROCK, HOTEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்