டால்பின் காதில் இருந்த ரிமோட் கன்ட்ரோல் மெஷின்..! ரொம்ப நாளா இருந்த டவுட்.. இப்போ கன்ஃபார்ம் ஆயிடுச்சு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல்: இஸ்ரேல் படையினர் டால்பினை வைத்து தங்கள் படையை தாக்கியதாக ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது குற்றசாட்டு வைத்துள்ளனர்.

Advertising
>
Advertising

பாலஸ்தீன நாட்டில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் முக்கியமான ஒரு குழு தான்  ஹமாஸ் இயக்கம். இருப்பதிலேயே மிக பெரிய குழுவான ஹமாஸ் இயக்கம் 80-களில் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் முக்கிய நோக்கமே பாலஸ்தீன விடுதலைக்காக போராடுவது ஆகும்.

இந்த நிலையில், ஹமாஸ் இயக்கம் தங்கள் கடற்படைப் பிரிவினரை டால்பின்களை வைத்து இஸ்ரேல் வேட்டையாடுவதாக பரபரப்பான தகவலை அல் குத்ஸ் என்ற பாலஸ்தீன நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

டால்பின்களை உளவாளிகளாக மாற்றுதல்:

அதில், 'இஸ்ரேலின் மொஸாத் உளவுப் பிரிவு, டால்பின்களை உளவாளிகளாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் நாடு ஒரு போர் வீரருக்கான அனைத்துப் பயிற்சிகளையும் டால்பினுக்குக் கொடுத்து கடலில் இறக்கிவிட்டுள்ளது.

நீண்ட காலமாக இருந்த சந்தேகம்:

கடந்த திங்கள்கிழமையன்று காஸா முனைப் பகுதியில் கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹமாஸ் வீரர்களை இதுபோன்ற ஒரு டால்பின்தான் துரத்தியுள்ளது. அதில் ஒரு வீரர் உயிரிழந்தார். எங்களுக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் தற்போது அது உறுதியாகியுள்ளது' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் வீரர்களை தூரத்திய டால்பினில் ஒரு சாதனம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் போராளிகளின் நடமாட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு தக்க நேரத்தில் தாக்குதல் நடத்த உதவியாக உள்ளது.

காதில் இருந்த கருவி:

அதோடு டால்பினுடன் இஸ்ரேலிய படைகள் பொருத்தியிருந்த சாதனத்தில் ஒரு ரிமோட் கன்ட்ரோல் கருவி இடம் பெற்றுள்ளது. அதாவது தொலை தூரத்திலிருந்து இந்த டால்பினை இந்த சாதனம் மூலம் இயக்க முடியும். இதுதவிர ஒரு கேமராவும் இருந்துள்ளது. இதை விட முக்கியமாக, ஹர்பூன் வகை ஏவுகணைகளையும் இந்த டால்பினில் பொருத்தியுள்ளனர் என்பதுதான் அதிர வைக்கிறது. அதற்கான குட்டி லான்ச்சரை அந்த டால்பின் உடலில் பொருத்தி அந்த லான்ச்சர் மூலம் ஏவுகணைகளை ஏவி எதிரிகளைத் தாக்கியுள்ளது மொஸாத்.

2015-ம் ஆண்டே இதுபோன்ற ஒரு டால்பினை ஹமாஸ் படையினர் பிடித்திருந்தனர். ஆனால் அப்போது அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் தற்போது ஹமாஸ் இயக்கம் மொஸாத் படையின்தான் டால்பின்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வீடியோ ஆதாரத்துடன் கூறியுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HAMAS, ISRAEL, DOLPHINS, ஹமாஸ், இஸ்ரேல், டால்பின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்