உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்னுகூடிய லட்சக்கணக்கான ஹேக்கர்ஸ்.. கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ என்ன..? பதற்றத்தில் ரஷ்யா..!
முகப்பு > செய்திகள் > உலகம்சைபர் தாக்குதலில் உக்ரைன் வெற்றிபெற லட்சக்கணக்கான தன்னார்வ ஹேக்கர்கள் உதவ முன்வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 2 வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனிடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
ஒருபக்கம் போர்க்களத்தில் இரு நாட்டு வீரர்களும் சண்டையிட்டு வரும் நிலையில், மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதலும் நடந்து வருகிறது. குறிப்பாக போர் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே உக்ரைன் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உக்ரேனிய இராணுவம் மற்றும் அரசாங்கத் துறைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் 196 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘செக் பாயிண்ட் ரிசர்ச்’ என்ற உலகளாவிய சைபர் தாக்குதல்களைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் அமைச்சர் மைக்கைலோ பெடோரோ இதுதொடர்பாக டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்தது இருந்தார். அதில், ‘நாங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப குழுவை அமைக்க இருக்கிறோம். அதில் எங்களுக்கு டிஜிட்டல் உலகில் திறமை வாய்ந்தவர்கள் தேவை. அனைவருக்கும் தனிப்பட்ட வேலைகள் வழங்கப்படும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த சைபர் தாக்குதலில் உக்ரைன் வெற்றிபெற உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐடி ஆர்மி ஆப் உக்ரைன்’ என்ற டெலிகிராம் குழு மூலம் இந்த தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர்.
இவர்களுக்கு ரஷ்ய இணையதளங்களை குறிவைக்கும் வகையில் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் தங்கள் மீது இதுவரை மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நடைபெறவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பொய்.. நம்பாதீங்க’.. ரஷ்ய செய்தி நேரலையில் திடீரென பதாகையுடன் புகுந்த இளம் பெண்.. அதுல என்ன எழுதியிருக்கு? பரபரப்பு வீடியோ..!
- அந்த ‘ஆப்’ தாங்க என் உயிர்.. திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க.. கதறி அழுத ரஷ்ய செலிபிரிட்டி..!
- "ஒரு வேளை சாப்பாடு.. 12 நாளும் பயத்தோட..".. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் சொன்ன உருக்கமான தகவல்..!
- Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?
- "8 கோடி பேர் யூஸ் பண்றாங்க.. ரஷ்யா எடுத்த முடிவு அதிர்ச்சியா இருக்கு".. இன்ஸ்டாகிராம் தலைவர் சொன்ன தகவல்..!
- "அத நெனச்சாலே பயமா இருக்கு"...உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் பிரதமர் மோடிக்கு வைத்த பரபரப்பு கோரிக்கை..!
- அம்மாவுக்கு மருந்து வாங்கணும்.. திடீர்னு சுத்தி வளச்ச ரஷ்ய வீரர்கள்.. பிறந்தநாள் அன்னிக்கு உக்ரைன் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..!
- “நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
- ‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..!
- முன்னேறும் ரஷ்ய ராணுவம்.."உடனே லேப்-ல இருக்கத எல்லாம் அழிச்சிடுங்க" உக்ரைனுக்கு WHO எச்சரிக்கை..!