உலகத்தின் Secret- ஆன பதுங்கு குழி.. பார்த்து பார்த்து கட்டிருக்காங்க.. எல்லாமே பக்கா பிளான்.. மிரள வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் கட்டப்பட்ட ரகசிய பதுங்கு குழி ஒன்று தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. இது மக்களை ஆச்சர்யமூட்ட ஒருபோதும் தவறுவதில்லை.

Advertising
>
Advertising

Also Read | சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் வங்கதேச பெண்ணை திருமணம் செய்த தமிழ் பெண்..!

ரகசிய இடம்

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனில் உள்ள செஷயரில் ஹேக் கிரீன் பதுங்கு குழி கட்டப்பட்டிருக்கிறது. ஹிட்லரின் ஜெர்மானிய படைகளின் தாக்குதலுக்கு பதில் திட்டம் தீட்டவும், அவசர காலங்களில் மக்களை பாதுகாக்கவும் இந்த இடம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு உதவியிருக்கிறது. அதன்பின்னர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையாகவும் இந்த இடத்தின் ஒருபகுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், 1960 களில் இந்த இடம் மூடப்பட்டுள்ளது.

Credit : visit cheshire

ஆனால், இதற்கு இன்னொரு வரலாறும் இருக்கிறது. அதாவது பனிப்போர் காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான போட்டிகள் தொடர்ந்து அதிகரித்தன. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு ஆதரவான நாடுகள் மீது ரஷ்யா ரகசிய அணுஆயுத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த இடத்தை பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்தியிருக்கின்றனர். ரஷ்யாவின் தாக்குதல் நடைபெற்றால் இந்த இடம் மக்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கும் என அதிகாரிகள் நம்பினர். ஆனால், சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு ரஷ்யாவின் அதிபராக மிகைல் கோர்பச்சேவ் அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பனிப்போர் முடிவிற்கு வந்தது.

Credit :  Hack Green

பதுங்கு குழி

இதன் காரணமாக இந்த பதுங்கு குழியை அருங்காட்சியமாக மாற்றியது பிரிட்டன். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு இந்த பதுங்கு குழி மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இதனுள் பழைய போலாரிஸ் கருவிகள் இன்னும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ரஷ்யா ஒருவேளை அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆயுதம் ஆகும். இதனை பயன்படுத்த பிரதமரின் நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேண்டும். மேலும், பிரிட்டனில் இதுவரை தயாரிக்கப்பட்ட சில சக்திவாய்ந்த தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்களை மக்கள் இங்கே பார்க்க முடியும். ஒருவேளை இது ஏவப்பட்டால் சில நிமிடங்களில் மில்லியன் கணக்கான மக்களை கொன்றுகுவிக்கும். ஆனால், பாதுகாப்பான முறையில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

credit : Jonathan White

உலக நாடுகளில் கட்டப்பட்டுள்ள பல பதுங்கு குழிகளில் இந்த ஹேக் கிரீன் பதுங்கு குழி முக்கியமானது. இதனாலேயே இங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Also Read | "பிறந்த குழந்தைக்கு பேரு பகோடாவா?"- வைரலான வேடிக்கை சம்பவத்தின் சுவாரஸ்ய பின்னணி

UK, SECRET NUCLEAR BUNKER, HACK GREEN SECRET NUCLEAR BUNKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்