'ப்ளீஸ்... இவங்கள மட்டும் விட்ருங்க!.. இல்லனா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!'.. அதிபர் டிரம்ப்புக்கு வந்த அவசர கடிதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

H1B விசா தடை விவகாரத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் 'எச்1 பி' விசாதாரர்களை பணியமர்த்த தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் "அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே" என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் 'எச்1 பி' விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் விதித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சிலர், விசா விவகாரத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஐ.டி ஊழியர்களை அடுத்து, H1B விசாவின் பயன்பாட்டாளர்கள் அதிகளவில் மருத்துவத் துறையில் தான் பணிபுரிகிறார்கள். "கொரோனா பேரிடர் காலத்தில், மருத்துவ ஊழியர்களுக்கு H1B விசா கட்டுப்பாடுகளை விதித்தால் தேவையின்றி பல உயிர்களை நாம் இழக்க நேரிடும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்