H-1B விசா விவகாரம்: 'இந்தியர்கள்' எடுத்த அதிரடி முடிவால் 'அரண்டு போயிருக்கும்' டிரம்ப் அரசு - அமெரிக்காவில் 'புதிய' திருப்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1 பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியர்கள் சிலர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எச்-1பி, எச்-4 உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிநாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரியும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எச்-1பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை பயன்படுத்தி இந்தியா, சீனா நாடுகளில் இருந்து அதிக அளவிலான மக்கள் அமெரிக்கா வருகின்றனர். தற்போது இந்த உத்தரவின் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த அமெரிக்க வர்த்தக சபை, விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கையானது நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை குறைக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டவர்களுக்கான எச்-1பி வேலைவாய்ப்பு விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 174 இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பான மனுவில் எச்-பி, எச்-4 உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை ரத்து செய்தது அமெரிக்க பொருளாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, இது குடும்பங்களை பிரிக்கிறது, எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இந்த மனுவை நேற்று விசாரித்த கொலம்பியா நிதிமன்றம், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் சாட் எஃப் வுல்ஃப் மற்றும் தொழிலாளர் செயலாளர் யூஜின் ஸ்காலியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்