'அமெரிக்காவில் படிச்சவங்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'H -1B விசாவில் வந்த அதிரடி மாற்றம்'... யாருக்கு லாபம்?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், எச் 1 பி விசாவில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள நிலையில், அங்குப் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் அதிபர் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று கருதப்படும் நிலையில், அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் எச் 1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, எச் 1 பி விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்யும். ஆனால் அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதில் அந்த இடத்தில் எச் 1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் வேலையிழப்பா?.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'!.. முழு விவரம் உள்ளே
- 'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'?... அதிர்ச்சி வீடியோ!
- தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி!.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது!.. முழு விவரம் உள்ளே
- சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'!.. எப்படி நடந்தது?
- கையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது?
- 'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா!?'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்!.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- தங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி!
- நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி!.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்!.. என்ன காரணம்?
- 'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்!
- ‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!