உயிரோட தான் 'பாக்க' முடில... அவங்க 'உடலைக்கூட' கண்டுபுடிக்க முடிலயே... 'நொறுங்கிப்போன' மகன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி சுமார் 100 பேர் பலியான சம்பவம் உலக மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertising
Advertising

கடந்த வெள்ளிக்கிழமை, லாகூரில் இருந்து கராச்சி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையம் அருகே தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், சுமார் 97 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த திஷாத் பேகம் என்பவரது மகனான ஷாஹித் அகமது என்பவர், தனது தாயின் வருகைக்காக கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்தார். பின்னர் விபத்து நடந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஷாஹித் அகமது, தனது தாயின் உடலை தேடியுள்ளார். இதுகுறித்து, ஷாஹித் தெரிவிக்கையில், 'விபத்து நடந்த இடத்தில் இருந்த இடத்தில் மக்கள் யாரும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அங்குள்ளவர்கள் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள்' என தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் தனது தாயின் உடல் கிடைக்காத நிலையில், மருத்துவமனைகளில் தாயின் உடலை தேட சென்றுள்ளார் ஷாஹித் அஹமது. ஆனால் அங்குள்ள மருத்துவமனையிலும், இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பட்டியல் என எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'என் தாயின் உடலை தேடுவது ஒரு கனவு போல இருந்தது' என ஷாஹித் அஹமது தெரிவித்துள்ளது அங்குள்ள மோசமான நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்