அதிபர் மாளிகை அருகே... படபடவென வெடித்த தோட்டாக்கள்!.. 'என்ன ஆச்சுனு பார்க்கப் போனா... குலை நடுங்கவைக்கும் ட்விஸ்ட்!'.. புரட்டிப் போட்ட சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கிழக்கு ஆப்பிரிக்க நாடான கினி தலைநகர் கோனாக்ரியில் திடீரென பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னணியில் பரபரப்பை கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை தலைநகர் கோனக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகே பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. அதேசமயம், தலைநகரில் உள்ள தெருக்களில் கவச வாகனங்கள் மற்றும் லாரிகளில் இராணுவ வீரர்கள் ரோந்து சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள கலூம் சுற்றுப்புறத்துடன் பிரதான நிலப்பகுதியை இணைக்கும் பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்தது.
ஜனாதிபதி ஆல்பா கான்டே காயமடையவில்லை என்று மூத்த அரசாங்க அதிகாரி கூறினார். ஆனால், சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், நகரில் பயங்கர துப்பாக்கிச் சூடு கேட்பதை காட்டுகிறது.
இந்த நிலையில் தான், தற்போது அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளிவந்தள்ளது. கினியில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அதிபர் ஆல்பா கான்டே கைது செய்யப்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இச்சம்பவத்தில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக மற்றும் குடிமக்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க'!.. 'இந்த சின்ன வயசுல இவ்ளோ கஷ்டமா'!?.. ராணுவ வீரர்களின் இரக்க குணத்துக்கு குவியும் பாராட்டுகள்!
- இது பச்சை துரோகம்...! இது 'continue' ஆச்சுன்னா நாங்க சும்மா விடமாட்டோம்...! 'நாங்க ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சு...' - கடும் 'எச்சரிக்கை' விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி...!
- நடுங்க வைக்கும் 'அடுத்த' வைரஸ்...! 'இந்த வைரஸ' மட்டும் முளையிலேயே கிள்ளலன்னா... 'அப்புறம் கண்ட்ரோல் பண்ண சான்ஸே இல்ல...' - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...!
- VIDEO: 'கொந்தளிப்பில் மியான்மர்'... 'எனக்கு ராஜாவா நான் வாழுறேன்'...'ஜாலியா இளம்பெண் செய்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!
- “காதைக் கிழித்த கணீர் சத்தம்!”.. ஒரு நொடி ஸ்தம்பித்த ‘விளையாட்டு போட்டிகள்!’.. உறைந்து நின்ற நகரம்.. வெளியான காரணம்!
- 'கொரோனா வைரஸுக்கு மருந்து ரெடி!'.. அதிரடியாக அறிவித்த சீனா!.. அடுத்த ஒராண்டுக்கு திட்டம் இது தான்!
- ‘ஆய்வகத்தில்’ உருவாக்கப்பட்டு ‘அக்டோபர்’ மாதம்... கொரோனாவை ‘வுஹானில்’ பரப்பியது ‘இவர்தான்’... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிர்ச்சி’ செய்தி...